மூக்குத்தி அம்மனை தொடர்ந்து மீண்டும் ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் போலீஸ் கதாபாத்திரத்தில் நயன்தாரா!
காமெடி நடிகர் ஆர்.ஜே.பாலாஜி ஹீரோவாக நடித்து அவர் கதை, திரைக்கதை, வசனம் எழுதிய திரைப்படம் எல்.கே.ஜி. இந்த படம் அரசியலை கலாய்த்து எடுக்கப்பட்டிருந்தது.
இதனை தொடர்ந்து மீண்டும் ஒரு படத்தில் ஹீரோவாக நடிக்க உள்ளார். இந்த படத்தையும் எல்.கே.ஜி. படத்தை தயாரித்த வேல்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. ஆன்மீக படமாக உருவாக உள்ள இப்படத்திற்கு மூக்குத்தி அம்மன் எனும் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
இப்படத்தில் மூக்குத்தி அம்மனாக நயன்தாரா நடிக்க உள்ளார். இப்படத்தை தொடர்ந்து அடுத்து ஆர்.ஜே.பாலாஜி இயக்கும் புதிய படத்தில் நயன்தாரா போலீஸாக நடிக்க உள்ளாராம். இந்த படத்தை நயன்தாரா காதலன் விக்னேஷ் சிவன் தான் தயாரிக்க உள்ளாராம்.