நயன்தாரா திருமணம் நடக்குமா?! உலகக்கோப்பை ஜோதிடரின் வாக்கு பழிக்குமா?!
‘உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் போது இந்தியா தோற்கும். இதற்க்கு முன்னர் கோப்பையை வெல்லாத அணி கோப்பையை வெல்லும். அதுவும் நியூசிலாந்து அணியின் கேன் வில்லியம்சனுக்கு அதிக வாய்ப்பு உள்ளது.’ இப்படி ஒரு கூற்றை உலகக்கோப்பை போட்டி நடைபெறுவதற்கு சொல்லி போட்டி முடிந்த பிறகு தமிழகம் முழுதும் பிரபலாமானவர் ஜோசியர் பாலாஜி ஹாசன்.
இவர் உலகக்கோப்பை பற்றி சொன்னது பெரும்பாலான உண்மை இருந்தது. அதே போல நயன்தாரா திருமணம் பற்றி கூறினார். அதாவது அவரது திருமணம் இந்த வருடத்திற்குள் 2019க்குள் நடைபெறும் என கூறியுள்ளார். நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் காதலித்து ஊர் சுற்றி வருவது உலகறிந்த விஷயம். இவர்கள் இன்னும் திருமணம் பற்றி சொல்லவில்லை. ஒரு வேளை ஜோசியர் சொன்னது நடந்து விடுமா இல்லை இந்த வருடத்திற்குள் திருமண செய்தி வருமா என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.