மலையாள நடிகையான மஞ்சு வாரியர் சமீபத்தில் அளித்த பேட்டியில் லேடி சூப்பர் ஸ்டார் நயனதாராவை புகழ்ந்து பேசியுள்ளார்.
மலையாள சினிமாவில் பிரபல முன்னணி நடிகையாக வலம் வருபவர் தான் மஞ்சு வாரியர். கடந்த சில ஆண்டுகளாக முன்பு நடிகர் திலீப்பை திருமணம் செய்து கொண்டு குடும்பத்துடன் செட்டிலாகி விட்டார். ஆனால் சமீபத்தில் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து செய்து கொண்டனர். அதனையடுத்து மீண்டும் சினிமாவில் ரீ என்ட்ரி கொடுத்த மஞ்சு வாரியர் சமீபத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான அசுரன் திரைப்படத்தில் பச்சையம்மாளாக நடித்து தமிழ் ரசிகர்களை பெற்றார்.தற்போது இவருக்கு பல தமிழ் பட வாய்ப்புகள் வருகின்றன. மேலும் பல பெண் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்த படங்களிலும் நடித்து வருகிறார். இவரை மலையாள சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என்று கூறலாம்.
இந்த நிலையில் சமீபத்தில் மஞ்சு வாரியர் அளித்த பேட்டியில் நயன்தாரா அவர்களை புகழ்ந்து தள்ளியுள்ளார். அதில் தனது பணியில் மிகுந்த அர்ப்பணிப்புடன் நயன்தாரா பணியாற்றி வருவதை கவனித்து வருவதாகவும், அவரை போல் யாரையும் பார்த்தது இல்லை என்றும் கூறியுள்ளார். மேலும் நயன்தாரா அவர்கள் பல நடிகைகளுக்கும் சிறந்த எடுத்துக்காட்டாகவும், வழிகாட்டியாகவும் இருக்கிறார். ஏனெனில் பெண்களாலும் வலிமையாக நிலைத்து நின்று சினிமா துறையில் சாதிக்க முடியும் என்பதனை நிரூபித்து உள்ளார் என்றும் கூறியுள்ளார். மேலும் அவர் எடுக்கும் அனைத்து முடிவுகளும் தனக்கு பிடிக்கும் என்றும், அவரது சொந்த வாழ்க்கையை குறித்து தனக்கு அதிகம் தெரியும் என்றும் மஞ்சு வாரியர் கூறியுள்ளார்.
சென்னை : 18-வது ஐபிஎல் சீசன் இந்த ஆண்டு வருகின்ற 22-ஆம் தேதி (சனிக்கிழமை) தொடங்கி வரும் மே 25-ஆம்…
சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி - சட்டப் பேரவை உறுப்பினர் செங்கோட்டையன் இடையே அதிருப்தி நிலவுவதாக சமூக…
டெல்லி : ஐபிஎல் 2025 சீசன் இன்னும் ஒரு வாரத்திற்குள் தொடங்கவுள்ள நிலையில், வரப்போகும் இரண்டு மாத கால கிரிக்கெட்…
சென்னை : 2025 - 2026 ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை அத்துறையின் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்து, பல்வேறு புதிய…
வாஷிங்டன் : அமெரிக்க விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் ஜூன் மாதம் முதல் சர்வதேச…
சென்னை : தமிழ்நாட்டில் புதிய தேசிய கல்விக்கொள்கை வழியாக மத்திய அரசு இந்தியை திணிக்க முயற்சிப்பதாக தொடர்ந்து திமுக அரசு…