கன்னியாகுமரியில் கோவில் கோவிலாக சுற்றி வரும் நயன்தாரா.!

Default Image
  • நடிகை நயன்தாரா தற்போது “மூக்குத்தி அம்மன்” என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். 
  • நேற்று மாலை சாமித்தோப்பில் உள்ள அய்யா வைகுண்டசாமி கோவிலில் நயன்தாரா தரிசனம் செய்தார்.

நடிகை நயன்தாரா தற்போது “மூக்குத்தி அம்மன்” என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்காக   நடிகை நயன்தாரா விரதமும் இருந்து வருகிறார். இப்படத்தை ஆர். ஜே பாலாஜி இயக்குகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு கன்னியாகுமரி மாவட்ட பகுதிகளில் உள்ள சில நடைபெற்று வருகிறது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள முக்கிய திருக்கோயில்களில் நடிகை நயன்தாரா சாமி தரிசனம் செய்து வருகிறார். கடந்த வாரம் கன்னியாகுமரி பகவதி அம்மன் திருக்கோயில் , நாகராஜா கோவில் மற்றும் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் சென்று தரிசனம் செய்தார்.

இந்நிலையில் நேற்று மாலை சாமித்தோப்பில் உள்ள அய்யா வைகுண்டசாமி கோவிலில் நயன்தாரா தரிசனம் செய்தார். அவரை பாலஜனாதிபதி வரவேற்று பதியினுள் அழைத்துச் சென்றார். அப்போது நயன்தாரா கொடிமரத்தை ஐந்து முறை வலம் வந்தார்.

பின்னர் பள்ளியறையும் ஐந்து முறை சுற்றி வந்து தரையில் அமர்ந்து பக்தியுடன் வழிபட்டனர். இதைத்தொடர்ந்து கோவிலில் இருந்த ரசிகர்கள் இந்த நயன்தாராவுடன் போட்டோ மற்றும் செல்பி எடுத்து இருந்தனர்

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்