சர்வதேச விருதை வென்ற முதல் தமிழ்ப் படம் ‘கூழாங்கல்’.! மகிழ்ச்சியில் நயன்-விக்கி.!
அறிமுக இயக்குநர் வினோத் ராஜ் இயக்கிய கூழாங்கல் சர்வதேச விருதை வென்ற முதல் தமிழ்ப் படம் என்ற பெருமையை பெற்றுள்ளது.
அறிமுக இயக்குநர் வினோத் ராஜ் இயக்கத்தில் யுவன் ஷங்கர் இசையில் உருவாகியுள்ள திரைப்படம் கூழாங்கல்.குடிகார அப்பாவுக்கும் மகனுக்குமான கதையை உருக்கமாக கூறியிருக்கும் இந்த திரைப்படத்தின் வெளியீட்டு உரிமையை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனின் ரௌடி பிக்சர்ஸ் வாங்கியுள்ளனர்.
இந்த திரைப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி வரவேற்பைப் பெற்ற நிலையில் சமீபத்தில் கூழாங்கல் திரைப்படம் நெதர்லாந்து நாட்டில் நடைபெற்று வரும் ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் ‘டைகர்’ பிரிவுக்கு போட்டியிட்டிருந்தது .இந்த விழாவில் பட்டுப்புடவையில் நயன்தாராவும், வேட்டி, சட்டையில் விக்னேஷ் சிவனும் படக்குழுவினருடன் பாரம்பரிய உடையில் கலந்து கொண்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலானது குறிப்பிடத்தக்கது
கடந்த வியாழக்கிழமை திரையிடப்பட்ட கூழாங்கல் திரைப்படத்தினை பார்த்த அனைவரும் படக்குழுவினரை பாராட்டியதுடன் கூழாங்கல் திரைப்படம் சர்வதேச விருதையும் பெற்றுள்ளது .ரோட்டர்டாம் சர்வதேச பட விழாவில் விருது பெற்ற முதல் தமிழ்ப் படம் என்ற பெருமையையும் கூழாங்கல் திரைப்படம் பெற்றுள்ளது.இது குறித்து இயக்குனர் விக்னேஷ் சிவன் கூறியதாவது, டைகர் விருதை வென்ற முதல் தமிழ்ப் படம் இது. இயக்குனர் வினோத்ராஜின் கடின உழைப்புக்கு இந்த மரியாதை கிடைத்துள்ளது. எங்கள் ரவுடி பிக்சர்ஸின் முதல் வெளியீடான கூழாங்கல் திரைப்படத்திற்கு இந்த விருது கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறோம் என்று குறிப்பிட்டுள்ளார்.தற்போது சர்வதேச விருதை வென்ற கூழாங்கல் படக்குழுவினருக்கு பலர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
First Production of @Rowdy_Pictures wins one of the most prestigious international award !
First Tamil film to win this award ????????????
2021 #TigerAward winner #Koozhangal #Pebbles
Can’t be happier ! 🙂 @PsVinothraj @thisisysr @Rowdy_Pictures #Nayanthara https://t.co/P8K0R8jF5g
— Vignesh Shivan (@VigneshShivN) February 7, 2021