“உன்னை காதலிக்கிறேன் தங்கமே”..காதலர் தினத்தை கொண்டாடும் நயன் & விக்கி..!

விக்னேஷ் சிவனும் அவரது காதலியான நயன்தாராவும் இணைந்து காதலர்தினத்தை கொண்டாடி வருகிறார்கள். அதற்கான புகைபடத்தை இன்ஸ்டாகிராமில் வெளியீட்டுள்ளார்.
கோலிவுட் சினிமாவில் மிகவும் பிரபலமான காதல் ஜோடிகளாக நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனை கூறலாம். கடந்த 2015ல் வெளியான நானும் ரவுடி தான் படத்தின் மூலம் தான் இவர்கள் இருவரின் காதல் ஆரம்பித்தது என்பது அனைவரும் அறிந்ததே. லிவ்விங் ரிலேஷன்சிப்பில் இருக்கும் இவர்கள் வழக்கமாக இருவரும் இணைந்துள்ள புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார் விக்னேஷ் சிவன்.
இந்த நிலையில் இன்று உலகம் முழுவதும் காதலர்கள் காதலர் தினத்தை கொண்டாடி வருகிறார்கள். தனக்கு பிடித்தவர்களை வெளியில் அழைத்து சென்று சிலர் அன்பை பரிமாறிக்கொண்டு வருகிறார்கள். அந்த வகையில் இயக்குனர் விக்னேஷ் சிவனும் அவரது காதலியான நயன்தாராவும் இணைந்து காதலர்தினத்தை கொண்டாடி வருகிறார்கள். அதற்கான புகைபடத்தை இன்ஸ்டாகிராமில் வெளியீட்டுள்ளார்.
அதில் நான் உன்னை காதலிக்கிறேன் தங்கமே எனவும், அனைத்து நண்பர்களுக்கு காதலர் தின வாழ்த்துக்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும் நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் இணைந்திருக்கும் புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
View this post on Instagram