திரைப்பட விழாவில் பட்டுப்புடவையில் நயன்தாராவும், வேட்டி, சட்டையில் விக்னேஷ் சிவனும் கலந்து கொண்டுள்ள புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவின் அழகான காதல் ஜோடிகளாக வலம் வருபவர்கள் தான் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன்.இவர்கள் இருவரும் இணைந்து ரெளடி பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி பல படங்களையும் தயாரித்து வருகிறார்கள்.அவ்வாறு இவர்கள் இணைந்து தயாரிக்கும் திரைப்படம் கூழாங்கல்.
அறிமுக இயக்குநர் வினோத் ராஜ் இயக்கத்தில் யுவன் ஷங்கர் இசையில் உருவான இந்த திரைப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி வரவேற்பைப் பெற்றது.தற்போது கூழாங்கல் திரைப்படம் நெதர்லாந்து நாட்டில் நடைபெற்று வரும் ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் ‘டைகர்’ பிரிவுக்கு போட்டியிட்டுள்ளது.இந்த விழாவில் பட்டுப்புடவையில் நயன்தாராவும், வேட்டி, சட்டையில் விக்னேஷ் சிவனும் கலந்து கொண்டுள்ளனர் .தனது படக்குழுவினருடன் பாரம்பரிய உடையில் கலந்து கொண்டுள்ள நயன் மற்றும் விக்கியின் அந்த அழகான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.
சென்னை : சென்னை அடையாறு முத்தமிழ் பேரவை சிவாஜி நினைவிடம் அருகே, திராவிட இயக்கத் தமிழர் பேரவை நடத்தும் "திராவிடமே…
சென்னை : கடந்த மாதம் 27-ல் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் தவெக கட்சியின் முதல் மாநாடு நடைபெற்றது. தவெக வெற்றிக்…
கோவை : முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் திமுக செய்தி தொடர்பாளருமான கோவை செல்வராஜ் (66) மாரடைப்பால் இன்று காலமானார். திருப்பதியில்…
சென்னை : நடிகர் சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் 'அமரன்' திரைப்படத்தில் இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரிப்பதாக குற்றச்சாட்டை முன்வைத்து எஸ்டிபிஐ கட்சியினர், கோவை,…
ஐரோப்பா : மறைந்த பிரிட்டன் அரசி எலிசபெத் இந்த மண்ணைவிட்டு மறைந்தாலும் அவர் பயன்படுத்திய பொருட்கள் பிரமாண்ட விலைக்கு ஏலத்தில்…
சென்னை : நடிகர் சூர்யாவின் “கங்குவா” படத்தை வெளியிடத் தடையில்லை என ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. ரூ.55 கோடி ரூபாயை வழங்காமல்…