நவராத்திரி "ஏழு "படிகள் உணர்த்துவது என்ன..?எப்படி அமைத்து வழிபடுவது…!!!

Default Image

நவராத்திரியில் இடம்பெற்றவை கொழுபொம்மைகள் அவற்றை அடிக்கி வைக்கும் படிகட்டுகள் குறித்து புராணங்கள் என்ன சொல்கிறது என்று பார்த்தால் புழுவாய் பிறந்து, மரமாகவும் பிறந்து மனிதராகவும் பிறந்து கடைசியில் இறைவனை அடைகிறோம் என்ற அர்த்தத்தில்தான் நவராத்திரி அன்று ஒன்பது படிகளில் பொம்மைகளை வைக்கிறோம்.
Related image

முதல் படி           

ஓரறிவு உயிர் இனமான புல், செடி, கொடி போன்ற தாவர பொம்மைகள் வைக்க வேண்டும்.

இரண்டாம் படி   

இரண்டறிவான நத்தை, சங்கு போன்ற பொம்மைகள் வைக்க வேண்டும்.

மூன்றாம் படி     

மூவறிவான கரையான், எறும்பு போன்ற பொம்மைகள் வைக்க வேண்டும்.

நான்காவது படி  

நான்கு அறிவான நண்டு, வண்டு பொம்மைகள் வைக்க வேண்டும்.

ஐந்தாம் படி        

ஐயறிவான நான்குகால் விலங்குகள், பறவைகள், போன்ற பொம்மைகள் வைக்க வேண்டும்.

ஆறம் படி           

ஆறறிவான மனிதர்களின் பொம்மைகள் வைக்க வேண்டும்.

ஏழாம் படி         

சாதாரண மனிதர்களுக்கு மேலான மகரிஷிகளின் பொம்மைகள் வைக்க வேண்டும்.

எட்டாம் படி      

தேவர்களின் உருவங்கள், நவக்கிரக பகவான்கள், பஞ்சபூத தெய்வங்களின் பொம்மைகள் வைக்கலாம்.

ஒன்பதாம் படி  

முதலில் விநாயகரை வைத்த பிறகு பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்திகளையும் , சரஸ்வதி, லட்சுமி, பார்வதி ஆகிய பெண் தெய்வங்களையும் வைக்க வேண்டும். இதில் சரஸ்வதி-லஷ்மிக்கும் நடுவில் அன்னை சக்திதேவி இருக்க வேண்டும்.
Image result for கொழு பொம்மை
பொதுவாக கொலுப் படிகளில் பொம்மைகள் வைக்கும் போது கடைசிப்படியான மேல்படியில் இருந்து வைக்க ஆரம்பிக்க வேண்டும். முதலில் மேலே உள்ள கொலுப்படியில் வைக்க வேண்டியது விநாயகர்.
விக்னங்கள் தீர்க்கும் விநாயகரை முதலில் கொலுப்படியில் வைத்த பிறகுதான் மற்ற பொம்மைகளை வைக்க வேண்டும் என்று பராசக்தி தேவி சொல்லி இருப்பதாக தேவி பாகவதம் சொல்கிறது.
Image result for நவராத்திரி கும்பம்
ஒன்பது படிகள் வைக்க முடியாதவர்கள் முப்பெரும் தேவியை குறிப்பதாகும் 3 படிகளும் வைக்கலாம். அல்லது சக்தியின் சக்கரமான 5 படிகளும் வைக்கலாம். சப்தமாதர்களை குறிக்கும் 7 படிகளும் அமைக்கலாம். நவகிரகங்களை குறிக்கும் 9 படியும் வைக்கலாம். ஆக, கொலு படிகள் 3,5,7,9 போன்ற எண் வரும்படி அமைக்கலாம்.இந்த 7 படிகளில் இறைவனால் படைக்கப்பட்டு இடம்பெற்றிருக்கும் உயிர்களையும் மதிக்க வேண்டும் மற்றும் மனிதனுக்கு பிறபி என்பது 7 முதல் படியிலிருந்து முன்னேறிய நாம் இறைவனை ஒருவ்வொரு படியாக முன்னோறி அவரிடமே சரண்புகவே இந்த தத்துவம்.வழிபட்டு வாழ்வு சிறக்க  வரவேற்போம் நவராத்திரியை கும்பிட்டு குறை களைவோம்.
DINASUVADU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்