நவராத்திரி திருவிழா உருவான வரலாறும்! சிவனும் விஷ்ணுவும் சிலையாக மாறிய தருணங்களும்!
நவராத்திரி விழா இந்துக்களால் புரட்டாசி மாதம் குறிப்பிட்ட 9 தினங்கள் கொண்டாடப்படுகிறது. இந்த விழா இரவுகளில் வீடுகளில் 9நாள் கொலு வைத்து வழிபடுவர்.
இது நவராத்திரி தோன்றியய வரலாறு என்பது, புராண காலத்தில், சும்பன் மற்றும் நிசும்பன் எனும் இரு அரக்கர்கள் ஆண் தெய்வத்தால் அழிக்க முடியாதபடி வரம் பெற்று மக்களை மிகவும் கொடுமைப்படுத்தி வந்துள்ளர்.
இதனை கண்டு அரக்கர்களிடம் இருந்து காத்துக்கொள்ள மக்கள் சிவபெருமானிடமும், விஷ்ணு பகவானிடமும் வேண்டினர். ஆனால், ஆண் தெய்வத்தால் அழிக்கமுடியாது என்பதால் சிவன் – விஷ்ணு – பிரம்மா என மூவரும் அன்னை ஆதி சக்தியை வணங்கினர்.
இவர்களின் வேண்டுதலிக்கிணங்க பெண் உருவத்தில் பூலோகம் வந்திறங்கினார் ஆதி சக்தி. இந்த ஆதி சக்தி அம்மனிடம் விஷ்ணு – சிவபெருமாள் – பிரம்மா ஆகியோர் தங்கள் சக்தியை ஆதி சக்தியிடம் கொடுத்துவிட்டு சிலையாக நின்றனர். அதன் நினைவாக தான் கொலு வைக்கப்படுகிறது.
மேலும், இந்த போர் ஒன்பது நாட்கள் நடைபெற்றது. அப்போது இரவில் ஆதி சக்தியின் படைகள் சோர்ந்து போகாமல் இருக்க அம்மன் புகழ் பாடும் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதன் காரணமாக தான் நவராத்திரி விழா ஒன்பது நாட்கள் இரவில் கொண்டாடப்படுகிறது. அன்றைய தினங்களில் தெய்வங்களின் உருவபொம்மைகளை வைத்து கொலு அமைத்து வழிபட்டு வருகின்றனர்.