நவராத்திரி என்ன பிரசாதம்…?செய்து வழிபட்டால் என்ன பலன்கள்…!!!
நவராத்திரி பண்டிகை 9 நாட்களும் வெகு சிறப்பாக கொண்டாடப்படும் விழாவாகும் இந்த நாட்களில் அம்பிகை வழிபாடு மிக முக்கியமான ஒன்றாகும்.இந்த வழிபாட்டை மேற்கொள்ளும் பெண்களுக்கு சுமங்கலி வரத்தை அம்பாள் அருளுகிறாள்,குழந்தை வரத்தை அளிக்கிறாள்,குடும்பத்தில் மகிழ்ச்சி நிலைக்க அருளுகிறாள்.
நவராத்திரி நாட்களில் அம்பாள் 9 நாட்களும் வீட்டில் தங்கி நமக்கு அருள் புரிகிறாள் நம் மரபு படி வீட்டிற்கு வந்தவர்களுக்கு பிடித்தமானவற்றை செய்து அவர்களை மகிழ்ச்சி படுத்துவோம் அப்படி பார்த்தால் நம் வீட்டிற்கு நமக்கு அருள்புரிய வரும் அன்னைக்கு விதமான பிரசாதங்களை படைத்து அன்னையை மகிழ்விக்க வேண்டும். மேலும் நவராத்திரி நவக்கிரகங்களை போன்றே 9 நாட்கள் வருவதால் இவை இரண்டின் பலன்களைக் கருதி வழிபட வேண்டும்.
நவ தானியங்கள் செய்து நவராத்திரியை வழிபடலாம். சுண்டலாகச் செய்து வழிபடலாம்.
இனி “நவராத்திரி” பிரசாதங்களும்,பலன்களும்……!
நவராத்திரி முதல் நாள்:
வெண்பொங்கலை பிரசாதமாக செய்து வழிபடுவது உகந்தது. இதன்மூலம் வறுமை நீங்கி, வளம் பெருகும். ஆயுள் விருத்தி உண்டாகும்.
நவராத்திரி இரண்டாம் நாள்:
புளியோதரையை பிரசாதமாக செய்து வழிபடுவதால் நோய்கள் நீங்கும். உள்ளத்தில் அமைதி கிடைக்கும்.
நவராத்திரி மூன்றாம் நாள்:
சர்க்கரைப் பொங்கலை பிரசதமாக செய்து வழிபடுவதால் தானிய விருத்தி உண்டாகும். வாழ்வு சிறப்படையும். பொருளாதார முன்னேற்றம் ஏற்படும்.
நவராத்திரி நான்காம் நாள்:
பலவிதக் காய்களும், பருப்பும் கலந்த கதம்ப சாதத்தை பிரசாதமாக செய்து வழிபடுவதால் பகை விலகும். எதிர்ப்புகள் அகலும். இன்னல்கள் தீர்ந்து இன்பம் சேரும்.
நவராத்திரி ஐந்தாம் நாள்:
தயிர் சாதத்தை பிரசாதமாகமாக செய்து வழிபடுவதால்மூலம் விரும்பிய செல்வங்களைப் பெறலாம்.
நவராத்திரி ஆறாம் நாள்:
தேங்காய் சாதத்தை பிரசாதமாகமாக செய்து வழிபடுவதால் கவலைகள் நீங்கி தனம் பெருகும்.எதிர்ப்புகள் விலகும்.
நவராத்திரி ஏழாம் நாள்:
எலுமிச்சை சாதத்தை பிரசாதமாக செய்து வழிபடுவதால் கல்வி வளர்ச்சியும், ஞான விருத்தியும் உண்டாகும்.
நவராத்திரி எட்டாம் நாள்:
பாசிப்பருப்பு, கடலைப்பருப்பு சேர்த்த பருப்பு பாயசத்தை, வடையுடன் நிவேதனமாக செய்து வழிபடுவதால் கேட்கும் வரங்கள் எளிதில் கிடைத்து நலம் பெறலாம்.
நவராத்திரி ஒன்பதாம் நாள்:
சர்க்கரைப் பொங்கலில் நெய் அதிகம் சேர்த்த அக்கார வடிசலை நிவேதனமாக செய்து வழிபடுவதால் குழந்தை வரம் பெறலாம்.
9 நாட்களும் மேற்கண்ட பிரசாதங்களை செய்து வழிபட்டு அன்னையின் பரிபூரண அருளை பெற்று மகிழ்ச்சியோடு வாழ்வோம்..நலம்…!
DINASUVADU