நவராத்திரி நெய்வேத்தியம் ரெடி..!செய்து வணங்க நீங்க ரெடியா…???
அம்பிகையின் அவதாரத்தில் அதிக நாட்கள் வழிபடு செய்யும் வழிபாடு இந்த நவராத்திரியானது ராத்திரிகளில் கொண்டாப்படும் விழாவாகும் வீடுகளில் மாவிலை கட்டி மாகோலம் மிட்டு படிகட்டுகளில் வரிசைப்படி அமைத்து திருவிளக்கேற்றி பிரசாதம், பழங்களை படைத்து வழிபடுவோம்.இதில் தம் வீட்டிற்கு கொழுபொம்மைகளையும்,விழாவில் கலந்து கொள்ள உற்றார் உறவினர் என அனைவரையும் அழைத்து அவர்களை வரவேற்போம்.
அவ்வாறு நவராத்திரியில் கலந்து கொண்டவர்களுக்கு பிரசாதம் கொடுக்க வேண்டாமா..?என்ன பிரசாதம் செய்து வழிபடுவது என்று தானே நினைக்கிறீர்கள் கவலை வேண்டாம் இதோ லிஸ்ட் செய்து அன்னையையும்,உற்றார் அனைவரையும் மகிழ்விப்போம்.
நவராத்திரியின் முதல் நாள் – கற்கண்டு பாயசம்,தேங்க பால் பாயசம்
நவராத்திரியின் இரண்டாம் நாள் – புளியோதரை சாதம்
நவராத்திரியின் மூன்றாம் நாள் – சர்க்கரைப் பொங்கல்
நவராத்திரியின் நான்காம் நாள் – கதம்ப சாதம்
நவராத்திரியின் ஐந்தாம் நாள் – தயிர்சாதம்
நவராத்திரியின் ஆறாம் நாள் – தேங்காய் சாதம்
நவராத்திரியின் ஏழாம் நாள் – எலுமிச்சம்பழச் சாதம்
நவராத்திரியின் எட்டாம் நாள் – பாசிப்பருப்பு, பால், வெல்லம்,ஏலக்காய் கலந்த பாயசம்
நவராத்திரியின் ஒன்பதாம் நாள் – அக்காரவடிசல்
இந்த பிரசாதங்களை செய்து நவராத்திரி அன்று அன்னையை வழிப்பட்டு வாழ்வில் வளங்களை பெற்று மகிழ்வோம் மற்றும் சுற்றத்தாரையையும் மகிழ்விப்போம்…நலம்…!
DINASUVADU