"நன்மைகளை அளிக்க வரும் நவராத்திரி"அறிந்து கொள்வோம் "நவ" ராத்திரி….!!!
அம்பிக்கையின் அவதாரத்தில் மிக முக்கியமான ஒன்றாக கருதப்படுவது நவராத்திரி அது என்ன நவராத்திரி நவம் என்றால் ஒன்பது ,ராத்திரி என்றால் தெரிந்த ஒன்றே இரவு அம்பிகையை ஒன்பது ராத்திரிகள் வணங்க வேண்டும் என்பதே இதன் பொருளாகும்.
இந்த 9 ராத்திரிகள் இறைவியை வணங்குவதால் வாழ்வில் ஏற்றத்தை வாரி வழங்குவாள் அம்பாள் இதை தவரவிடாமல் நம் பின்பற்றி மூன்று தேவிகளையும் மனமுகந்து வணங்கி மகிழ்ச்சியை பெறுவோம்.
அம்பாள் அவரித்ததும் நவராத்திரி கொண்டாட்டமும்:
மகிஷன் என்ற அரக்கன் ரம்பன் என்பவனுக்கும் எருமை உருவம் கொண்ட அரக்கிக்கும் பிறந்தவன். இதனால்தான் இந்த அரக்கனுக்கு மனிதஉடலும் எருமை தலையும் கொண்ட உடலமைப்பை பெற்று தோன்றினான்.
அரக்கனான மகிஷன் மூம்முர்த்திகளில் ஒருவரான பிரம்மவாவை நினைத்து மேருமலையில் 14,000 ஆண்டுகள் தவம் செய்தான் தவத்தை கண்டு நெகிழ்ந்த பிரம்ம தேவர் அரக்கன் முன் தோன்றி வேண்டும் வரத்தை கேள் என்றார் உடனே பிரம்ம தேவரை கண்ட மகிழ்ச்சியில் வரத்தினை கேட்டான் மகிஷன் அதில் தனக்கு யாராலும் மரணம் நேரக்கூடாது என்றான் அதற்கு பிரம்மர் பிறந்த உயிர்கள் அனைத்தும் ஒருநாள் மரணத்தை அடைய வேண்டும்.
இதுவே நீதி என்றார் அதற்கு செவி சாய்த்த மகிஷன் வரத்தினை வேறு விதமாக மாற்றி கேட்டான் அப்படியே எனக்கு மரணம் நேர்ந்தால் அது பெண்ணால்தான் இருக்கவேண்டும் என்ற வரத்தை பிரம்ம தேவரிடம் பெற்றான். அரக்கனின் நினைப்பு படி பெண்கள் பூவை போல் இருப்பதால் அவர்களால் இரும்பை விட வலிமையான தன்னை கொன்று விட முடியாது என்று மகிஷன் நினைத்து கொண்டு இப்படி ஒரு வரத்தை பெற்றான்.
தன்னை அழிக்க இவ்வுலகில் எவரும் இல்லை என்று எண்ணிய மகிஷன் தனது அரக்க படையொடு இணைந்து தேவலோகத்தையே கைப்பற்ற நினைத்தான். இதனால் பயந்த தேவர்கள் விஷ்ணுவிடம் உதவி கேட்டனர். மகாவிஷ்ணு தேவர்களுக்காக உதவி செய்ய மகிஷனிடம் போருக்கு சென்றார்.
ஆனால் மகிஷனை விஷ்ணுபகவானால் வீழ்த்த முடியவில்லை.காரணம் அவன் பெற்ற வரத்தினால் அவரால் அவனை அழிக்கமுடியாமல் சிவனிடம் சென்று மகிஷனின் கொடுமைகளை எடுத்து கூறினார். சிவபெருமான் தன் சக்தியால் “சந்தியாதேவி” என்ற சக்தியை உருவாக்கினார்.
இந்நிலையில் சந்தியாதேவியாக அவதரித்த சக்தியானவள் அறிவும்,ஆற்றலும் பார்ப்பவரை கவர்ந்திழுக்கும் அழகும் பெற்று விளங்கினாள் அம்பாள்.மகிஷனே தன்னிடம் போரிட வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்தார் சந்தியாதேவி இந்நிலையில் மகிஷன் அம்பாள் நடந்து செல்வதை பூலோகத்தில் கண்டான் இத்தனை அழகை பெற்ற நங்கையை தமக்கு மணமுடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அம்பாளை கண்டு அழகில் மயங்கிய மகிஷன் திருமணம் செய்ய தூது விட்டான்.
இந்த தூததை மறுத்த சக்தி தன்னை யார் போர் செய்து வீழ்த்துகிறார்களோ அவரைதான் நான் திருமணம் செய்வேன் என்று மகிஷனின் தூதுவனிடம் சொல்லி அனுப்பினாள்.தூதை ஏற்ற மகிஷன் தன் வீரர்களை தேவியிடம் போருக்கு அனுப்பினார். அம்பாளிடம் போர் செய்தவர்கள் யாரும் உயிருடன் திரும்பாததை கண்ட மகிஷன், தானே கடைசியாக அம்பாளிடம் யுத்தத்திற்கு வந்தான்.
தேவி மகிஷனை பலமாக தாக்கி வீழ்த்தினாள் ஆனால் போராடி அவனுடைய எருமை தலையை தன் சக்கரத்தால் வெட்டி வீழ்த்தினாள். மகிஷன் மாண்டான். இதை கண்ட தேவர்கள் மகிழ்ச்சியில் அடைந்தனர். மகிஷனிடம் போராடி போர் செய்து தேவலோகத்தையும், பூலோகத்தையும் காப்பாற்றியதால் “மகிஷாசுரமர்த்தினி” என்று தேவியை போற்றினார்கள் . ஒன்பது நாள் போர் செய்து பத்தாவது நாள் தேவி வெற்றி பெற்றதால் விஜயதசமி உருவானது என்று புராணங்கள் கூறுகிறது.
இந்நிலையில் முதல் மூன்று நாட்கள் துர்க்கா பூஜையின் போது, தேவி மலைமகளாக இருந்து இச்சா சக்தியை, அதாவது, நமக்குள் இருக்கும் கெட்ட எண்ணங்களை அழிக்கும் தீர்மானத்தைத் தருகிறாள்.
இரண்டாவது மூன்று நாட்கள் லட்சுமியாக இருந்து, நமக்கு க்ரியா சக்தியை, அதாவது, வேண்டிய எல்லா செல்வங்களையும் கொடுத்து, நம்மை முழு மனிதனாக ஆக்குகிறாள். மூன்றாவது மூன்று நாட்கள் சரஸ்வதியாக உருவாகி, நமக்கு ஞான சக்தியை அருளி, நாம் மோட்சம் அடையும் வழியைக் காட்டுகிறாள்.
இது போன்ற அம்பாளின் அவதார கதையை கேட்பதாலும் படிப்பதாலும் நவராத்திரி பற்றி அறிவதாலும் நமக்கு புண்ணியமே கிடைக்கிறது.மேலும் அவளை நினைத்து வணங்கினால் அருள்புரிவேன் என்று அம்பாளே அருளுகிறாள் நவராத்திரி நம் வாழ்வில் நன்மைகளை நாடச் செய்யும் ராத்திரிகள் கொண்டாடி வழிபடுவோம் நலம்…,
DINASUVADU