நாள்தோறும் ஏதோ ஒரு நோயினால் இக்காலத்தில் நாம் அனைவரும் அவதி அடைந்து வருகிறோம் எனது மறுப்பதிற்கில்லை.இத்தகையான நோய்கள் நம்மை வந்து அடையாமல் காத்துக்கொள்வது எப்படி இந்த கேள்விக்கும் நம் முன்னோர்கள் அழகாக விடையளித்து விட்டுத்தான் சென்றுள்ளனர்.அது தான் நவகிரக வழிபாடு.மனித வாழ்க்கையில் ஒருவரின் நடவடிக்கையை தீர்மானிப்பது இந்த கிரகங்கள் தான்.ஆக நம் வாழ்க்கையில் நவகிரங்கள் தான் மிக முக்கிய பங்கினை வகிக்கிறது.நவகிரகங்களினால் தான் பெரும்பாலும் நோய்கள் ஏற்படுகிறது.அந்நோய் நீங்கவும்,ஆரோக்கியமான வாழ்வு அமையவும் என்ன பரிகாரங்கள் என்பது குறித்து அறிவோம்
நாள்தோறும் குளித்துவிட்டு சூரியபகவானை வணங்கினால் ஆரோக்கிய சீராகும்.கண் தொடர்பான நோய்கள் ஏற்படாது.நம்மை எவ்வகையான நோய்களும் பிடிக்காது.
திங்கள் கிழமைத்தோறும் சந்திரபகவானை வழிபட்டு வந்தால் மன நலம் சீராகும். சளி,நுரையீரல் தொடர்பான நோய்கள் நீங்கும்.சந்திரனின் மூன்றாம் பிறையை தரிசியுங்கள் ஆரோக்கியம் சிறக்கும்.
செவ்வாய் கிழமைகளில் செவ்வாய் தேவனை வணங்குவது நல்லது காரணம் நம் உடலில் ஓடுகின்ற இரத்திற்கு அதிபதி இவர்.இரத்த தானம் செய்தால் நல்லது.இது செவ்வாய்க்கு செய்கின்ற பரிகாரம் ஆகும்.இரத்தம் தொடர்பான நோய்கள் நீங்கும்.
புதன் கிழமைகளில் கோவிலுக்கு சென்று நவகிரக சன்னதியில் உள்ள புத பகவானுக்கு சிறிது பச்சைப்பயிரை நைவேத்தியமாக வைத்து வழிபட்டால் நரம்பு தொடர்பான நோய்கள் நீங்கும்
வியாழக்கிழமைகளில் குருபகவானை வழிபட்டுவது வாதம்,பக்கவாதம் போன்ற நோய்கள் ஏற்படாது.
வெள்ளிக்கிழமை சுக்கிர பகவானை வழிபட்டால் அதுவும் விரதம் இருந்து வழிபட்டால் நன்மைகள் உண்டாகும்.அவ்வாறு வழிபட்டால் நிரிழிவு நோய்,இனப்பெருக்க உறுப்புகள் தொடர்பான நோய்கள் நீங்கும்
சனிக்கிழமை வழிபாடு ஆனது ஆயுளை அதிகரிக்கும்.அன்று சனீஸ்வர் வழிபடுவது நல்லது.காரணம் ஆயுள் காரகனாக விளங்குபவர் இவர். சனிக்கிழமை எண்ணெய் தேய்த்து குளித்து நீராடுபவர்களுக்கு நோய்களை அண்டவிடாமல் செய்வார் சனிஸ்வரர்.புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களும் சனிக்கிழமைகளில் சனி,ராகு,கேது வழிபாடு மேற்கொண்டு அந்தந்த கிரகங்களுக்கு உண்டான மந்திரத்தை கூறி வழிபட்டால் நோய் ஆபத்து நீங்கும்.
பஞ்சாப் : ஒரு காலத்தில் எப்படி கலக்கிக்கொண்டு இருந்தீங்க இப்போ உங்களுடைய நிலைமை இப்படி ஆகிவிட்டதே என்கிற கேள்வியை இளம்…
வாஷிங்டன் : அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சொந்தமாக ‘ட்ரூத் சொஷியல்’ (Truth Social) சமூக ஊடக தளம் வைத்திருக்கிறார்.…
டெல்லி : 9 மாதங்களுக்கு மேலாக விண்வெளியில் சிக்கியிருந்த சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோரை பத்திரமாக பூமிக்கு கொண்டு…
சென்னை : கடந்த (2024) ஆண்டு ஆண்டு நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தேமுதிக, அதிமுகவுடன் கூட்டணி அமைத்து தேர்தலில்…
சென்னை : இன்று காலையில் திருநெல்வேலி டவுன் பகுதியில் ஓய்வுபெற்ற காவல் ஆய்வாளர் ஜாகீர் உசேன் மர்ம நபர்களால் வெட்டிபடுகொலை…
சென்னை : தமிழக பட்ஜெட் மீதான விவாதம் தமிழக சட்டப்பேரவையில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த விவாதத்தின் போது சட்டமன்ற…