ஆரோக்கியத்தில் அவதிப்படுகிறீர்களா!?? இவர்களை வணங்குங்கள் சீறாகும் ஆரோக்கியம்..!

Default Image

நாள்தோறும் ஏதோ ஒரு நோயினால் இக்காலத்தில் நாம் அனைவரும் அவதி அடைந்து வருகிறோம் எனது மறுப்பதிற்கில்லை.இத்தகையான நோய்கள் நம்மை வந்து அடையாமல் காத்துக்கொள்வது எப்படி இந்த கேள்விக்கும் நம் முன்னோர்கள் அழகாக விடையளித்து விட்டுத்தான் சென்றுள்ளனர்.அது தான் நவகிரக வழிபாடு.மனித வாழ்க்கையில் ஒருவரின் நடவடிக்கையை தீர்மானிப்பது இந்த கிரகங்கள் தான்.ஆக நம் வாழ்க்கையில் நவகிரங்கள் தான் மிக முக்கிய பங்கினை வகிக்கிறது.நவகிரகங்களினால் தான் பெரும்பாலும் நோய்கள் ஏற்படுகிறது.அந்நோய் நீங்கவும்,ஆரோக்கியமான வாழ்வு அமையவும் என்ன பரிகாரங்கள் என்பது குறித்து அறிவோம்

நாள்தோறும் குளித்துவிட்டு சூரியபகவானை வணங்கினால் ஆரோக்கிய சீராகும்.கண் தொடர்பான நோய்கள் ஏற்படாது.நம்மை எவ்வகையான நோய்களும் பிடிக்காது.

திங்கள் கிழமைத்தோறும் சந்திரபகவானை வழிபட்டு வந்தால் மன நலம் சீராகும். சளி,நுரையீரல் தொடர்பான நோய்கள் நீங்கும்.சந்திரனின் மூன்றாம் பிறையை தரிசியுங்கள் ஆரோக்கியம் சிறக்கும்.

செவ்வாய் கிழமைகளில் செவ்வாய் தேவனை வணங்குவது நல்லது காரணம் நம் உடலில் ஓடுகின்ற இரத்திற்கு அதிபதி இவர்.இரத்த தானம் செய்தால் நல்லது.இது செவ்வாய்க்கு செய்கின்ற பரிகாரம் ஆகும்.இரத்தம் தொடர்பான நோய்கள் நீங்கும்.

புதன் கிழமைகளில் கோவிலுக்கு சென்று நவகிரக சன்னதியில் உள்ள புத பகவானுக்கு சிறிது பச்சைப்பயிரை நைவேத்தியமாக வைத்து வழிபட்டால் நரம்பு தொடர்பான நோய்கள் நீங்கும்

வியாழக்கிழமைகளில் குருபகவானை வழிபட்டுவது வாதம்,பக்கவாதம் போன்ற நோய்கள் ஏற்படாது.

வெள்ளிக்கிழமை சுக்கிர பகவானை வழிபட்டால் அதுவும் விரதம் இருந்து வழிபட்டால் நன்மைகள் உண்டாகும்.அவ்வாறு வழிபட்டால் நிரிழிவு நோய்,இனப்பெருக்க உறுப்புகள் தொடர்பான நோய்கள் நீங்கும்

சனிக்கிழமை வழிபாடு ஆனது ஆயுளை அதிகரிக்கும்.அன்று சனீஸ்வர் வழிபடுவது நல்லது.காரணம் ஆயுள் காரகனாக விளங்குபவர் இவர். சனிக்கிழமை  எண்ணெய் தேய்த்து குளித்து நீராடுபவர்களுக்கு நோய்களை அண்டவிடாமல் செய்வார் சனிஸ்வரர்.புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களும் சனிக்கிழமைகளில் சனி,ராகு,கேது வழிபாடு மேற்கொண்டு  அந்தந்த கிரகங்களுக்கு உண்டான மந்திரத்தை கூறி வழிபட்டால் நோய் ஆபத்து நீங்கும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்