குடல்புழுக்களை வெளியேற்ற இயற்க்கை மருத்துவம்..!

Default Image

 

நம் குடலில் புழுக்கள் அதிகம் உள்ளது என்பதை எப்படி கண்டறிவது என்று கேட்கலாம்.
நிச்சயம் அதற்கும் அறிகுறிகள் உள்ளன.
அவை வயிற்றுப்போக்கு, மிகுந்த சோர்வு, குமட்டல், மலக்குடல் எரிச்சல், திடீர் உடல் எடை குறைவு போன்றவை

சிறுகுடற்புழுக்களை நீக்க குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் மருந்து

இரத்த சோகை சத்துக் குறைபாடு செரிமானக் கோளாறுகள் அலர்ஜி மலச்சிக்கல் வயிற்ருப் போக்கு ஆகிய பிரச்சினைகள் தீர்ந்து குடல் இயக்கம் சீர் படும்

 

  1. சுண்டைக்காய்ப் பொரியல்
    பச்சை சுண்டைக்காயை நைத்து எடுத்துக் கொள்ளவும்
    வாணலியில் விளக்கெண்ணெய் ஊற்றி சீரகம் வெந்தயம் சின்ன வெங்காயம் கறிவேப்பிலை போட்டு தாளித்து நைத்து வைத்திருக்கும் சுண்டைக்காயைப் போட்டுக் கிளறி மஞ்சள் தூள் போட்டிக் கிளறி மிளகுத்த்கூல் கல் உப்புப் போட்டு பொரியலாக்கி இறக்கி உணவுடன் சேர்த்து சாப்பிட்டு வர குடல் புழுக்கள் நீங்கும்

 

2. பாகற் காய் கூட்டு மிதி பாகல் அல்லது நாட்டு பாகற்காய் மட்டும் பயன் படுத்த வேண்டும்

வாணலியில் நல்லெண்ணெய் விட்டு சின்ன வெங்காயம் பெருங்காயம் பாகல் காய் துவரம்பருப்புடன் பூண்டு சேர்த்து வேக வைத்து எடுத்த பருப்பு மசியல்ஆகியவற்றை சேர்த்து கூட்டாக செய்து உணவுடன் சேர்த்து சாப்பிட்டு வர குடல் புழுக்கள் வெளியேறும்

 

3. அகத்திக் கீரை பூண்டு சாறு

அகத்திக் கீரை சாறு .. ஒரு தேக்கரண்டி
பூண்டு சாறு. …. .. ஒரு தேக்கரண்டி
தேன் ……. தேவையான அளவு
மூன்றையும் கலந்து தினமும் காலையில் ஒரு வாரம் மட்டும் குடித்து வர குடலில் தங்கியிருக்கும் புழுக்கள் வெளியேறும்

 

4. வாய் விடங்கப் பொடி
வாய் விடங்கம் ஓமம் மிளகு சுக்கு கறிவேப்பிலை கல் உப்பு ஆகியவற்றை ஒவ்வொன்றாக பொன்னிறமாக வறுத்து ஆறவைத்து ஒன்றாக சேர்த்து அரைத்துப் பொடியாக எடுக்க வேண்டும்
இந்த வாய் விடங்கப் பொடியை தோசை இட்டிலி சோறு போன்ற உணவுடன் சேர்த்து சாப்பிட்டு வர குடல் புழுக்கள் வெளியேறும்
குறிப்பு : வாய் விடங்கம் அல்லது வாய் விளங்கம் என்பது மிளகு போன்ற ஒரு பொருள் எல்லா நாட்டு மறுத்துக் கடைகளிலும் கிடைக்கும் நாற்பது ஐம்பது வருடங்களுக்கு முன் அந் தமிழ் நாட்டு அடுக்களையில் மிளகு போல தவறாமல் இடம் பிடித்திருந்த நாம் மறந்துவிட்ட பொருள் இது

 

5. வேப்பிலை துவையல்
சிலர் வேப்ப இலைக் கொளுந்துகளை அரைத்துக் குடிப்பர்
கசப்பு காரணமாக சிலர் குடிக்க மறுப்பார்கள் அப்படிப் பட்டவர்கள் கீழ்க்கண்டவாறு வேப்பிலை உருண்டைகள் செய்து விழுங்கலாம்
வேப்பங் கொழுந்து கறிவேப்பிலை பூண்டு மிளகு ஓமம் சுக்கு ஆகிய பொருட்களைத் தேவையான அளவு எடுத்து நாட்டுப் பசு நெய்யில் பொன்னிறமாக வறுத்து இறக்கி ஆறவைத்து கல் உப்பு சேர்த்து அரைத்து துவைலாக்கி சிறு சிறு உருண்டைகளாக உருட்டி விழுங்கி தண்ணீர் குடிக்க குடல் புழுக்கள் வெளிஎறம்

 

6. குப்பைமேனியிலையை நிழலில் உலர்த்திப் பொடித்து 1/2 தேக்கரண்டிஸ்பூன் அளவு எடுத்து தேனில் கலந்து குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் வயிற்றுப் புழுக்கள், மலப்புழுக்கள் வெளியேறும். நீரில் கலந்தும் கொடுக்கலாம்.
ஆறு மாதத்திற்கு ஒரு முறை குழந்தைகளுக்கு கொடுப்பது நல்லது
பெரியவர்கள் குப்பைமேனி இலையின் சாறு எடுத்து இலேசாக சூடாக்கி 15 மி.லி.
அளவு குடித்து வர பெரியவர்களின் குடல் புழுக்கள் வெளியேறும்

 

7. கீரை சூப்
சின்ன வெங்காயம் – இரண்டு

நல்ல மிளகு – இரண்டு

சீரகம் – 1/2 தேக்கரண்டி

இஞ்சி – சிறிய துண்டு

தேவையான அளவு – கீரை (தண்டுக்கீரை அல்லது அகத்திக்கீரை)

பூண்டு – 1 பல்

சேர்த்து சூப் செய்து, வாரத்தில் மூன்று நாட்கள் மாலை வேளையில் அருந்தி வந்தால் குடற்புழுக்கள் நீங்கும்.

 

8. யானை திப்பிலி, அரிசி திப்பிலி, வேப்பிலை, சுக்கு, சீந்தில் தண்டு, நிலவேம்பு, சுண்டை வற்றல் ஆகியவற்றை நன்கு உலர்த்தி, சுத்தம் செய்து, சம அளவு எடுத்து ஒன்றிரண்டாக இடித்து, பின் ஒன்றாக கலந்து வைத்துக்கொள்ள வேண்டும்.

10 கிராம் பொடியை 500 மிலி நீரில் போட்டு கொதிக்கவைத்து 100 மிலியாக சுண்டியபின் வடிகட்டி, அதிகாலை வெறும் வயிற்றில் 7 நாட்கள் குடித்துவர, வயிற்றுப்புழுக்கள் வெளியேறும்.

 

9. புழுத்தொல்லையினால் ஏற்பட்ட தோல் தடிப்பு, வெள்ளை நிற மாவு படிதல், மலவாய் அரிப்பு, பலவிதமான வயிற்று உபாதைகள் நீங்க யானைத்திப்பிலியை இளவறுப்பாக வறுத்து, பொடித்து 1 கிராம் அளவு எடுத்து தேனுடன் குழப்பி, 3 முதல் 7 நாட்கள் சாப்பிட்டுவர வயிற்றுப்புழுக்கள் மலத்துடன் வெளியேறும்

 

10. குப்பை மேனி செடியின் வேரை இடித்து கஷாயமாக்க வேண்டும். அக்கஷாயத்தில் 30 மில்லி எடுத்து அதனுடன் சிறிது தேன் கலந்து அருந்தினால் வயிற்று புழுக்கள் வெளியாகும்.

 

11. குடலில் புழுக்கள் தங்கியிருந்தால் அவை குடல் சுவர்களை அரித்து தின்று புண்களை உண்டாக்கும். இதனால் செரிமானத்தன்மை குறையும். இந்த குடற்புழுக்களை அழிப்பதற்கு மல்லிகை மலர்களை நீர் விட்டு கொதிக்கவைத்து வடிகட்டி அருந்தினால் குடல் புழுக்கள் நீங்கும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

today LIVE
Space docking
TN CM MK Stalin - ADMK Chief secretary Edappadi palanisamy
NTK Leader Seeman - Madurai High court
BYD Yangwang U9
Ajithkumar
Pawan Kalyan - Tirupati Temple