“நேட்டோவுடன் இணைய விருப்பம் இல்லை;புடினுடன் பேசத் தயார்” – உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி திடீர் அறிவிப்பு!

Default Image

நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவதை விரும்பாத ரஷ்யா, உக்ரைன் மீது போர் தொடுத்து கடுமையாக தாக்குதல் நடத்தி வருகிறது. மேலும்,உக்ரைனின் முக்கிய நகரங்களையும் ரஷ்யா கைப்பற்றி வருகிறது.

எனினும்,ரஷ்யாவின் தாக்குதலுக்கு உக்ரைனும் தக்க பதிலடி கொடுத்து வருகிறது.இதனிடையே,ரஷ்யா போர் நடவடிக்கையை நிறுத்த வேண்டும் என உலக நாடுகள்  கூறி வந்தாலும்,அதற்கு செவி சாய்க்காமல் தொடர்ந்து போரிட்டு வருகிறது.

இந்நிலையில்,நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணையும் தனது மனநிலை மாறிவிட்டதாக அந்நாட்டு அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.மேலும்,இது தொடர்பாக ஏபிசி செய்தி நிறுவனத்துக்கு அளித்த பெட்டியில் அவர் கூறியதாவது:

“உக்ரைனை நேட்டோவில் இணைத்துக் கொள்ள ஏற்கனவே அந்த அமைப்பில் உள்ள நாடுகள் முனைப்பு காட்டவில்லை என்பதை நான் புரிந்து கொண்டேன்.

ரஷ்யாவுடனான போர் மற்றும் சர்ச்சைகளை கருத்தில் கொண்டே உக்ரைனை தங்களது அமைப்பில் இணைத்து கொள்வதற்கு நேட்டோ  அஞ்சுகிறது.எனவே,நேட்டோ அமைப்பில் சேர்த்துக்கொள்ளும்படி இனி வற்புறுத்த மாட்டோம்.மேலும்,எதையும் காலில் விழுந்து கெஞ்சி பெரும் நாடாக உக்ரைன் இருக்காது.

அதே சமயம்,இந்த போரில் உக்ரைன் மக்கள் ரஷ்யாவிடம் சரணடையவும் தயாராக இல்லை.எங்கள் மண்ணை விட்டுக் கொடுக்க மாட்டோம்.இறுதி வரை நாங்கள் போராடுவோம்”,என்று கூறினார்.

இதனைத் தொடர்ந்து பேசிய அவர்,”ரஷ்யாவால் சுதந்திர பகுதிகளாக அங்கீகரிக்கப்பட்ட கிரீமியா,டான்பாசின் உள்ள மக்கள் எப்படி வாழப் போகிறார்கள்,அவர்களின் எதிர்காலம் தொடர்பாக ரஷ்யா அதிபர் புடினுடன் விவாதிக்க தயார்”,என்று தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்னதாக,”நான் கீவ் நகரில் உள்ள பாங்கோவா தெருவில் இருக்கிறேன் என்று தனது முகவரியை வெளியிட்டு, நான் ஒளிந்து கொள்ளவில்லை நான் யாருக்கும் பயப்படவில்லை, தேச பக்தியுடன் போராடும் எங்களை இந்த போர் வெற்றி அடைய செய்யும்”, என உக்ரைன் அதிபர் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்