இன்று தேசிய தெர்மல் இஞ்சினியர்க தினம்..!

Default Image

ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 24 ஆம் தேதியன்று தேசிய தெர்மல் இன்ஜினியர் தினம் அனுசரிக்கப்படுகிறது.

உலகில் தெர்மல் (வெப்பம்) ஆற்றலின் முக்கியத்துவத்தையும், இத்துறைகளில்  பணியாற்றும் இன்ஜினியர்களின் பங்களிப்பையும் நினைவுகூரும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 24 அன்று தேசிய  தெர்மல் இன்ஜினியர் (வெப்ப பொறியாளர்) தினம் கொண்டாடப்படுகிறது.

நோக்கம்:

தெர்மல்(வெப்பம்)இன்ஜினியர்கள் காட்டும் அர்ப்பணிப்பை மதிப்பதே இந்நாளின் முக்கிய நோக்கமாகும்.

தெர்மல் (வெப்ப) ஆற்றல் என்பது:

வெப்ப ஆற்றல் என்பது ஓர் அமைப்பில், அதன் வெப்ப இயக்கவியல் சமநிலைக்கு ஏற்ப இருக்கும் அக ஆற்றலைக் குறிக்கும்.மேலும்,ஒரு பொருளைச் சூடுபடுத்தும்போதோ,குளிர்விக்கும்போதோ அதன் வெப்பநிலைக்கு ஏற்ப வெப்ப ஆற்றலும் மாறுபடும்.ஒரு பொருளின் வெப்பம் (இயக்கவியல்) மாறும்போது அது வெப்ப ஆற்றல் என்று அழைக்கப்படுகிறது.

தேசிய தெர்மல் இன்ஜினியர் தினம் – வரலாறு:

தெர்மல் துறையில் இன்ஜினியர்களின் அர்ப்பணிப்பு மின்னணு, கண்டுபிடிப்பு மற்றும் உறுதிப்பாட்டை  அங்கீகரிப்பதற்காக கடந்த 2014 ,ஜூலை மாதம் மேம்பட்ட தெர்மல் சொல்யூசன், இன்க். (ஏடிஎஸ்) அமைப்பால் இந்த நாள் தேசிய தெர்மல் இன்ஜினியர்(வெப்ப பொறியாளர்)  தினமாக அறிவிக்கப்பட்டது.

அதன்படி,ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 24 ஆம் தேதியன்று தெர்மல் இன்ஜினியர் தினம் அனுசரிக்கப்படுகிறது.

மேற்கோள்கள்(Quotes):

  1.   “வெப்ப இயற்பியலைக் கற்பிப்பது ஒரு பாடலைக் கற்பிப்பது போலவே எளிதானது, நீங்கள் அதை சற்று தவறாக மாற்றும்போது அதை எளிதாக்குகிறீர்கள் என்று நினைக்கிறீர்கள்.” – மார்க் ஜெமான்ஸ்கி.
  2. “இயந்திர விளைவைப் பெறக்கூடிய வெப்ப நிறுவனம் ஒரு வெப்பநிலையை ஒரு உடலில் இருந்து மற்றொரு உடலுக்கு குறைந்த வெப்பநிலையில் மாற்றுவதாகும்.” – சாதி கார்னோட்.
  3. “அறிவியல் என்பது அறிந்து கொள்வது; பொறியியல் செய்வது. “- ஹென்றி பெட்ரோஸ்கி.
  4. “நாங்கள் வழக்கமாக சாத்தியமற்றது என்று கருதுவது வெறுமனே பொறியியல் சிக்கல்கள்… அவற்றைத் தடுக்கும் இயற்பியல் சட்டம் எதுவும் இல்லை.” – மிச்சியோ காகு
  5. “பொறியியல் மனதைத் தூண்டுகிறது.” – புரூஸ் டிக்கின்சன்
  6. “நிகழ்வுகள் பற்றிய எளிய விளக்கங்களை அறிவியல் அழகாகக் காட்டுகிறது”- ஸ்டீபன் ஹாக்கிங் உள்ளிட்ட பலர் தெர்மல் ஆற்றலை பற்றி எடுத்துரைத்துள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்