இந்தியாவில் மக்கள் மற்றும் மணவர்களின் மத்தியில் நாட்டின் தொழில்நுட்ப முன்னேற்றத்தை தெரியப்படுத்தும் விதமாகவும் இந்தியனாக பெருமைப்படும் விதமாகவும் இந்த தினம் கொண்டாடப்படுகிறது. இந்த தினமானது, இந்தியா அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறையில் நாட்டின் சாதனைகளை அங்கீகரிப்பது மற்றும் புதிய தொழில்நுட்பங்களை உருவாக்குவது, வருங்கால இந்தியாவான இளைஞர்களுக்கு அறிவியல் மீதான ஆர்வத்தை ஏற்படுத்துதல் ஆகியவற்றை வலியுறுத்தி, மே 11ல் தேசிய தொழில்நுட்ப தினம் கொண்டாடப்படுகிறது
இத்தினம் உருவான வரலாறு:
இந்தியா ஊலக அளவில் தன்னையும் ஓர் அணுசக்தி நாடாக இந்த உலகிற்கு 1998ஆம் ஆண்டு மே மாதம் 11 மற்றும் மே மாதம் 13 ஆகிய தினங்களில் ராஜஸ்தான் மாநிலம் பொக்ரானில் நடத்திய அணுகுண்டு சோதனைகள் வெற்றி பெற்றன. இதன் மூலம் உலகின் அணு ஆயுத நாடுகளின் பட்டியலில், ஆறாவது நாடாக இந்தியா இணைந்தது. இந்த சாதனையை அங்கீகரிக்க இந்த நாள், தேசிய தொழில்நுட்ப தினமாக அறிவிக்கப்பட்டது. மேலும், உள்நாட்டு தயாரிப்பில் உருவான அதிநவீன ஏவுகனைகளான திரிசூல் ஏவுகணை, ஹன்சா- -3 விமானம், கண்டம் விட்டு கண்டம் பாயும் (5,000 கி.மீ., சுற்றளவு) அக்னி-5 ஏவுகணை, இஸ்ரோவின் 100க்கும் மேற்பட்ட செயற்கைக்கோள்கள், உள்நாட்டு தயாரிப்பில் உருவான ‘கிரையோஜெனிக்’ இன்ஜின், நிலவை ஆராய ‘சந்திராயன்’, செவ்வாய் கிரகத்தை ஆராய ‘மங்கள்யான்’ விண்கலம் ஆகியவை இந்திய அறிவியல், தொழில்நுட்ப துறையின் முக்கிய சாதனைகள். ககன்யான், ஆதித்யா திட்டம், போன்ற வருங்கால திட்டங்களும் அடங்கும். விண்வெளி, பாதுகாப்பு, தகவல் தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி துறைகளில், இந்தியா மேலும் சிறப்பாக முன்னேற இளைஞர்கள் பாடுபட வேண்டும். அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் குறித்த ஆர்வத்தை பள்ளி மாணவர்களிடம் ஏற்படுத்த வேண்டும் என்பதே இந்த தினம் கொண்டாடப்படுவதன் நோக்கமாகும்.
சண்டிகர் : இன்றைய ஐபிஎல் போட்டியில் ஷ்ரேயஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான்…
சண்டிகர் : இன்றைய ஐபிஎல் போட்டியில் ஷ்ரேயஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான்…
சென்னை : தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக இருக்கும் நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசன் அவ்வப்போது சில அரசியல் கருத்துக்களை பேசியும்…
சென்னை : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், டெல்லி கேபிட்டல்ஸ்…
தூத்துக்குடி : கடந்த 1999ஆம் ஆண்டு செப்டம்பர் 17, 18 தேதிகளில் ஒரு வழக்கு விசாரணைக்காக வின்சென்ட் என்பவர் கைது…
சென்னை : மத்தியில் நாடாளுமன்றத்திற்கும் மாநில சட்டமன்றங்களுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தும் பொருட்டு மத்திய அரசு முயற்சி மேற்கொண்டு…