#Breaking: அசுரன் படத்திற்கு தேசிய விருது அறிவிப்பு..!!
தனுஷ் நடிப்பில் வெளியான அசுரன் படத்திற்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2019 ஆம் ஆண்டில் வெளிவந்த படங்களுக்கான 67-வது தேசிய விருதுகள், இன்று அறிவிக்கப்பட்டன. இந்த விழா, கொரோனா பரவல் காரணமாக டெல்லியில் உள்ள தேசிய ஊடக மையத்தில் அறிவிக்கப்பட்டது.
இதில் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ், மஞ்சு வாரியர், பிரகாஷ் ராஜ், பசுபதி, கென் கருணாஸ் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் அசுரன் திரைப்படத்திற்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அதைபோல் அசுரன் திரைப்படத்துக்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதும் நடிகர் தனுஷ்க்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைத்திருந்தார்.