சிறந்த துணை நடிகருக்கான விருது பிரிவில் சூப்பர் டீலக்ஸ் படத்திற்காக நடிகர் விஜய் சேதுபதிக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
2019-ஆம் ஆண்டுக்கான 67-வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு கொரோனா காரணமாக விருதுகள் அறிவிக்கப்படவில்லை. இந்நிலையில், தற்போது தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டது. இதில் சிறந்த துணை நடிகருக்கான விருது பிரிவில் சூப்பர் டீலக்ஸ் படத்திற்காக நடிகர் விஜய் சேதுபதிக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
அதைபோல் ஒத்த செருப்பு திரைப்படத்திற்கு 2 தேசிய விருதுகள் அறிவிக்கப் பட்டுள்ளது. ஒத்த செருப்பு திரைப்படத்திற்காக ரசூல் பூக்குட்டிக்கு சிறந்த ஒளிப்பதிவாளர் விருது வழங்கப்படுகிறது. மேலும் பார்த்திபன் இயக்கி, நடித்த “ஒத்த செருப்பு” திரைப்படத்திற்கு சிறப்பு ஜூரி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
அசுரன் படத்திற்காக நடிகர் தனுஷுக்கு சிறந்த நடிகர் விருது வழங்கப்படுகிறது. சிறந்த நடிகருக்கான தேசிய விருது நடிகர் தனுஷ் 2-வது முறையாக வழங்கப்படுகிறது. ஆடுகளம் படத்திற்காக முதல் முறையாக தேசிய விருதை நடிகர் தனுஷ் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : தமிழ்நாடு அரசின் பொது நிதிநிலை அறிக்கை கடந்த 14-ஆம் தேதியும், வேளாண்மைக்கான நிதிநிலை அறிக்கையை 15-ஆம் தேதியும் தாக்கல்…
சென்னை : தமிழ்நாடு சட்டமன்றத்தில் 2025-26 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் மீதான விவாதம் இன்று தொடங்குகிறது. தமிழ்நாடு அரசின் பொது…
சென்னை : ஏ.ஆர்.ரஹ்மான் திடீரென உடல்நிலை சரியில்லாமல் இன்று காலை 7:30 மணியளவில் நெஞ்சு வலி காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில்…
சென்னை : தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணாமாக, தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும்,…
பாகிஸ்தான் :பலுசிஸ்தான் விடுதலைப் படை (Baloch Liberation Army - BLA) பாகிஸ்தானின் நோஷ்கி பகுதியில் பாகிஸ்தான் ராணுவப் படைகளின்…
ஏடன்: அமெரிக்கா ஏமனில் உள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீது பெரிய அளவிலான தாக்குதல்களைத் தொடங்கியுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்…