தமிழ் சினிமாவை புறந்தள்ளியதா இந்திய தேசிய திரைப்பட விருதுகள்?!
இந்த வருடத்துக்கான திரைப்பட தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுவிட்டன. இதில் தெலுங்கு படமான மகாநதியில் நடித்த கீர்த்தி சுரேஷிற்கு சிறந்த நடிகைக்கான விருதும், கன்னட படமான கேஜிஎஃப் திரைப்படம் இரு விருதுகள் இதுவே தென்னிந்திய சினிமாவிற்கு கொடுக்கப்பட்ட அதிகபட்ச அங்கீகாரம் என தெரிகிறது. வேறு படத்திற்கு அறிவித்துள்ளார்களா என தெரியவில்லை.
இதனால் தமிழ் திரைப்பட விமர்சகர்கள், திரைப்பட பிரமுகர்கள் விமர்சித்து வருகின்றனர். முக்கியமாக சென்றாண்டு வெளியாகி இருந்த பரியேறும் பெறுமாள், வடசென்னை, ராட்சசன், கனா, என பல நல்ல தமிழ் சினிமாக்கள் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பையும் பெற்றது. ஆனால் இந்த மாதிரியான தமிழ் திரைப்படங்கள் தேசிய விருது பட்டியலில் இடம் பெறாமல் போனது தமிழ் சினிமா கலைஞர்களுக்கு வருத்தமானதே என விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.