நத்தம் மாரியம்மன் கோவில் மாசித்திருவிழாவானது கடந்த மாதம் 24ந்தேதி கொடியேற்றத்தோடு வெகுச்சிறப்பாக தொடங்கியது. பின் அம்மன் குளத்தில் இருந்து கம்பம் நகர் வலமாக எடுத்து வரப்பட்டு கோவிலில் ஸ்தாபிதம் செய்யப்பட்டதுடன் தொடர்ந்து காப்புக்கட்டி பக்தர்கள் விரதம் இருந்தனர்.இந்நிலையில் திருவிழான்று அதிகாலையில் இருந்து பிற்பகல் வரை பக்தர்கள் அக்னிசட்டி எடுத்து வந்த நிலையில் அலகு குத்தியும், மாறு வேடம் அணிந்தும் பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். மேளதாளம் முழங்க, தாம்பூலத்தில் அன்னைக்கு அர்ச்சனை பொருட்களை மஞ்சள் துணியால் கட்டி பக்தர்கள் ஊர்வலமாக கொண்டு வந்தனர்.
பின் இவர்கள் அன்னையை தரிசனத்து விட்டு பூக்குழி இறங்க நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.15 நாட்கள் விரதம் இருந்து பக்தர்கள், ஒருவர் பின் ஒருவராக பூக்குழியில் இறங்கினர். பக்தி பரவசத்துடன் சிறுவர் ,முதியவர் என வயது வித்தியாசம் இல்லாமல் பூக்குழி இறங்கினர். கைக்குழந்தையுடன் சில பெண்கள் பூக்குழி இறங்கிய காட்சி மெய் சிலிர்க்க வைத்தது.
இந்நிலையில் நத்தம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பூக்குழியில் இறங்கி தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். இதையடுத்து கோவில் முன்பு ஊன்றப்பட்டிருந்த கழுமரத்தில் ஏறும் நிகழ்ச்சியும் நடந்தது. இதில் ஏராளமான இளைஞர்கள் கலந்து கொண்டு கழுமரத்தின் மீது போட்டிபோட்டு ஏறினர்.
திருநெல்வேலி : நெல்லையில் இளைஞர் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த…
சென்னை : தமிழக பட்ஜெட் 2025-2026 முடிந்து அதன் பிறகு பட்ஜெட் மீதான விவாதம், துறை வாரியாக மானிய கோரிக்கைகள்…
மும்பை : மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொண்ட ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, வான்கடே மைதானத்தில் விராட் கோலி ஆல்…
மும்பை : ஐபிஎல் தொடரில் நேற்றைய ஆட்டத்தில் மும்பை அணிக்கு எதிரான போட்டியில் 12 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி…
சண்டிகர் : ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் இன்று (ஏப்.08) மோதுகின்றது.…
சென்னை : வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. அதன்படி, ரூ.818.50…