நாசாவின் வெப் ஸ்பேஸ் தொலைநோக்கி வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது
விண்வெளியின் அற்புதமான படத்தை நீங்கள் பார்த்திருந்தால் அதற்கு நாசாவின் ஹப்பிள் என்ற தொலைநோக்கி பூமிக்கு வெளியே விண்ணில் நிலைநிறுத்தப்பட்டது. அந்த விண்வெளி தொலைநோக்கி மனிதனுக்கு இதுவரை தெரிந்திடாத பல அரிய விண்வெளி தகவல்களை தெரிந்திட வழி வகுத்தது. சில நேரங்களில் இது விண்வெளியில் “பூமியின் கண்” என்றும் அழைக்கப்படுகிறது. ஆனால் இந்த இயந்திரம் தற்போது மோசமான நிலையில் உள்ளது.
நம் வீடுகளில் பொதுவாக எந்த பழைய இயந்திரத்திரம் இருந்தால் அதை சரி செய்வோம். அது வேலை செய்யவில்லை என்றால், அந்த இயந்திரத்தை மாற்றுவோம். அதையே தான் தற்போது நாசாவும் செய்துள்ளது. ஹப்பிளை விண்வெளிக்கு அனுப்பிய அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா, தற்போது விண்வெளியின் காட்சிகளைக் காண புதிய இயந்திரத்தை உருவாகியுள்ளது.
நாசாவின் புதிய தொலைநோக்கியில் தங்கக் கண்ணாடி உள்ளது. அதன் அகலம் சுமார் 21.32 அடி. பெரிலியத்தால் செய்யப்பட்ட 18 அறுகோண துண்டுகளை இணைத்து இந்த கண்ணாடி தயாரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு துண்டிலும் 48.2 கிராம் தங்க முலாம் பூசப்பட்டு, அது பிரதிபலிப்பாளராக செயல்படுகிறது. இந்த தொலைநோக்கி சுமார் 1.5 மில்லியன் கிமீ உயரத்தில் விண்வெளியில் நிறுவப்படும்.
ஜேம்ஸ் வெப் தொலைநோக்கிக்கு எந்த சேதமும் ஏற்படவில்லை என்றால் அது தொடர்ந்து 5 முதல் 10 ஆண்டுகள் வரை தனது வேலையைச் செய்யும். ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி பிப்ரவரியில் விண்வெளியின் முதல் படத்தை அனுப்பும். இந்த தொலைநோக்கி பழைய ஹப்பிளிலிருந்து முற்றிலும் வேறுபட்டது. ஹப்பிள் போலல்லாமல், ஒரு தவறு ஏற்படும் போது, அதை பூமியில் இருந்தே சரிசெய்ய முடியும்.
ஏப்ரல் 24, 1990 அன்று நாசா சக்திவாய்ந்த ஹப்பிள் தொலைநோக்கியை விண்வெளிக்கு அனுப்பப்பட்டது. சுமார் ஒரு மாதம் பிறகு, ஹப்பிள் மே 20, 1990 அன்று முதல் முறையாக ஒரு படத்தை அனுப்பியது. 1990-ம் ஆண்டு ஏவப்பட்ட ஹப்பிள் டெலஸ்கோப் பலமுறை பழுதுபார்க்கப்பட்டும் இன்னும் சிக்கல்கள் உள்ளன. அதனால்தான் நாசா இப்போது ஹப்பிளுக்குப் பதிலாக 10 பில்லியன் டாலர் (சுமார் ரூ.73,616 கோடி) மதிப்பிலான ஜேம்ஸ் வெப் டெலஸ்கோப்பை ஏவியுள்ளது.
ஜேம்ஸ் வெப் விண்வெளிக்குச் செல்வதன் மூலம், பிரபஞ்சத்தின் தோற்றம் மற்றும் பல தசாப்தங்கள் பழமையான மர்மங்களும் தீர்க்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிரெஞ்ச் கயானாவில் உள்ள கௌரோ ஏவுதளத்தில் இருந்து ஏரியன்-5 ஈசிஏ ராக்கெட் மூலம் “ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கி” ஏவபட்டுள்ளது.
பீகார் : ஹாக்கியில் மகளிருக்கான 8-வது ஆசிய கோப்பைத் தொடரானது தற்போது பீகாரில் உள்ள ராஜ்கிரில் நடைபெற்று வருகிறது. இந்த…
மாஸ்கோ : கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி 24-ம் தேதி முதல், நோட்டோ அமைப்பு நாடுகளுடன் உக்ரைன் இணையக் கூடாது…
சென்னை : வரும் நவம்பர் 20-ஆம் தேதி நயன்தார-விக்னேஷ் சிவன் இருவரின் திருமண வீடியோ நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியாக இருக்கிறது.…
மும்பை : இந்திய அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் அடங்கிய டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இந்த…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் வளிமண்டல காற்றழுத்த சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் தென்மாவட்டங்களில் ஒரு…
சென்னை : நயன்தாரா மற்றும் தனுஷ் இருவரும் ஒன்றாக யாரடி நீ மோகினி, நானும் ரவுடி தான், எதிர்நீச்சல் ஆகிய…