நாசி ஸ்ப்ரே தடுப்பூசியை மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள சீனா ஒப்புதல்.!
நாசி ஸ்ப்ரே தடுப்பூசியை மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள சீனா ஒப்புதல் அளித்துள்ளது.
கொரோனா வைரஸ் எதிர்த்துப் போராடுவதற்கான முதல் நாசி ஸ்ப்ரே தடுப்பூசி சோதனைக்கு சீனாவின் தேசிய மருத்துவ தயாரிப்பு நிர்வாகத்தால் ஒப்புதல் வழக்கப்பட்டுள்ளது. இந்த நாசி ஸ்ப்ரே தடுப்பூசியை ஹாங்காங் பல்கலைக்கழகம், ஜியாமென் பல்கலைக்கழகம் மற்றும் பெய்ஜிங் வாண்டாய் உயிரியல் மருந்தகம் ஆகியவற்றின் ஆராய்ச்சியாளர்கள் கூட்டாக உருவாக்கி உள்ளனர்.
இந்த நாசி ஸ்ப்ரே தடுப்பூசியை வருகின்ற நவம்பர் மாதத்தில் முதல் கட்ட மருத்துவ பரிசோதனைகளைத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இந்த சோதனைக்காக 100 தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என குளோபல் டைம்ஸ் தெரிவித்துள்ளது.
புதிய தடுப்பூசி முறை பக்க விளைவுகளை ஏற்படுத்தாது, ஆனால், ஆஸ்துமா மற்றும் மூச்சுத் திணறல் போன்றவர்களுக்கு பக்க விளைவுகள் ஏற்படக்கூடும் என நோயெதிர்ப்பு நிபுணர்கள் கூறுகின்றனர்.
நாசி ஸ்ப்ரே தடுப்பூசிகளிலிருந்து உருவாகும் நோய் எதிர்ப்பு சக்தி ஊசி போடப்பட்ட தடுப்பூசிகளை விட நீண்ட காலம் நீடிக்குமா..? என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஆண்டு டிசம்பரில் சீனாவின் வுஹான் நகரத்திலிருந்து பரவிய கொரோனா வைரஸால் உலகளவில் இதுவரை 913,927 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 28,329,602 பேர் பாதிக்கப் பட்டுள்ளனர். இந்த கொரோனா வைரஸை தடுக்க பல நாடுகளில் தீவிரமாக தடுப்பூசி தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.