வெற்றிகரமாக 2 மாதத்திற்கு பின் பூமிக்கு திரும்பிய நாசா வீரர்கள் !

Default Image

அமெரிக்காவில் உள்ள தனியார் நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்கு மனிதர்களை அனுப்ப திட்டமிட்டு கடந்த மே மாதம் ராபர்ட் எல். பெஹன்கென் மற்றும் டக்ளஸ் ஜி. ஹர்லி ஆகியோரை விண்வெளிக்கு அனுப்பியது. இதன் மூலம் விண்வெளிக்கு வீரர்களை அனுப்பிய முதல் தனியார் நிறுவனம் என்ற பெருமையை பெற்றது.

சர்வதேச விண்வெளி நிலையத்தில் 2 மாதங்களாக தங்கி ஆராய்ச்சி  செய்து வந்த நிலையில், ராபர்ட் எல். பெஹன்கென் மற்றும் டக்ளஸ் ஜி. ஹர்லி ஆகிய இருவரும் கடந்த சனிக்கிழமை  சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து புதிய க்ரூ டிராகனில் மூலம் சனிக்கிழமை பூமிக்கு புறப்பட்டனர்.

சுமார் 21 மணி நேரம் பயணம்செய்த நிலையில் இன்று அதிகாலை  மெக்ஸிகோவின் வளைகுடா கடல்பகுதியில் இருவரும் தரையிறங்கினர். பின்னர் படகு மூலம் கடற்கரைக்கு  இருவரும் அழைத்து வரப்பட்டனர்.

இவர்களுக்கு  மருத்துவ பரிசோதனைக்கு பின் குடும்பத்தினரை சந்திக்க அனுமதிக்கப்பட்டனர். 45 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக ஸ்பிளாஷடவுன் என்றுஅழைக்கப்படும் தண்ணீரில் தரையிறங்குவதை நாசா வெற்றிகரமாக செய்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்