விண்கல்லின் சுற்றுப்பாதையில் நுழைந்து நாசா விண்கல் சாதனை…!!
நாசா என்ற அமெரிக்கா விண்வெளி ஆய்வு மையம் பல்வேறு ஆராய்ச்சிகளை செய்கிறது. நாசா ஓசிரிஸ்-ரேக்ஸ் என்ற வகையை சார்ந்த செயற்கைக்கோளை “பின்னு ” என்ற விண்கல்லை ஆய்வு நடத்துவதற்காக விண்ணுக்கு அனுப்பியது. பூமியில் இருந்து 110 மில்லியன் கிலோ மீட்டர் தொலைவில் உள்ள “பின்னு ” என்ற விண்கல்லின் சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக நாசாவின் விண்கலம் நுழைந்து சாதனை படைத்துள்ளது.மேலும் விண்கல்லின் சுற்றுப்பாதையை சென்றடைந்துள்ளது இதுவே முதல் முறையாகும். தொடர்ந்து ஆய்வு நடத்தி “பின்னு” விண்கல் பற்றிய அறிந்து கொள்வோம் என்று நாசா விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.