செவ்வாய் கிரகத்தில் செயலிழந்து வரும் ரோவர் விண்கலம்…!
பூமியைப் போன்று வேறு கிரகங்களிலும் உயிரினங்கள் இருக்குமா? என்ற கேள்வி மனிதர்களுக்கு எப்போதும் இருந்து கொண்டே தான் உள்ளது.அந்த காரணத்தினால் பல கோள்களை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்திருந்தாலும்,செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் உள்ளதா?,அங்கு மனிதர்கள் வாழ்வதற்கேற்ப சூழ்நிலைகள் இருக்கிறதா? என்று கண்டுபிடிக்கும் பணிகளில் நீண்ட காலமாக விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனையடுத்து,அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா கடந்த ஆண்டு பெர்சிவ்ரென்ஸ் ரோவர் என்ற விண்கலத்தையும்,அதனுடன் 1.8 கிலோ எடை அளவிலான சிறிய ஹெலிகாப்டர் ஒன்றையும் இணைத்து செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பியுள்ளது.
அதன்படி,செவ்வாயின் Elysium Plantina என்ற சமவெளியில் வெற்றிகரமாக ரோவர் தரையிறக்கப்பட்டது.இதனைத் தொடர்ந்து,விண்கலத்திலிருந்து பிரிந்து ஹெலிகாப்டரும் தரையிறங்கியது.இது மனித வரலாற்றில் மிகப்பெரிய சாதனையாகும்.
தரையிறக்கப்பட்ட ரோவரானது,செவ்வாய் கிரகத்தை சுற்றி புகைப்படம் எடுத்து நாசாவிற்கு அனுப்பி வருகிறது.மேலும்,செவ்வாயின் மண் துகள்கள் உள்ளிட்ட மாதிரிகளையும் சேகரித்து ஆய்வு பணிகளை செய்து வருகிறது.
இந்த நிலையில்,செவ்வாய் கிரகத்தின் புழுதிப்புயல் காரணமாக ரோவர் விண்கலத்தின் பல அடுக்குகளில் தூசிகள் நிறைந்து உள்ளதால், சூரிய ஒளியைப் பெற முடியாமல் கடுமையான பாதிப்புகளை சந்தித்து வருகிறது.இப்படியே தொடர்ந்தால் இன்னும் சிறிது காலத்திற்குள் விண்கலம் செயலிழந்து போய்விடும் என்பதால் ரோவரில் உள்ள பேட்டரியின் செயல்திறனை தக்க வைப்பதற்காக,விண்கலத்தின் பல பாகங்களை ஸ்லீப்(sleep mode) நிலையில் வைக்க நாசா முயற்சி செய்து வருகிறது.
இதைப் பற்றி அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா கூறுகையில்,செவ்வாயில் உள்ள தற்போதைய சூழ்நிலையின் காரணமாக ரோவர் நிகழும் வானிலை மாற்றங்களை கணக்கிட முடியாமல் போகுமே தவிர,ரோவர் முற்றிலும் செயலிழக்காது எனவும்.மேலும்,அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளது.