196 நாட்கள் கழித்து பூமிக்கு திரும்பிய ‘நாசா விண்வெளி’ வீரர்கள்!

சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து 196 நாட்களுக்கு பின் கிறிஸ் கேசிடி மற்றும் அவரின் குழுவினர், பூமிக்கு திரும்பினார்கள்.
நாசாவில் பணிபுரியும் கிறிஸ் கேசிடி மற்றும் அவரின் குழு, கடந்த ஏப்ரல் மாதம் 9 ஆம் தேதி விண்வெளிக்கு சென்று, சர்வதேச விண்வெளி நிலையத்தில் எஸ்படிஷன் 63 எனும் பிரிவில் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். இவர்கள் விண்வெளியில் இருக்கையில் ஏற்பட்ட சூரிய கிரகணத்தின்போது அங்கிருந்து பூமியை எடுக்கப்பட்ட படங்களைப் பகிர்ந்திருந்தார். அது இணையத்தில் அதிகளவில் பகிரப்பட்டுள்ளது.
Touchdown!!! The Exp 63 crew, with @Astro_SEAL, @ivan_mks63 and Anatoly Ivanishin, has returned to Earth landing safely in Kazakhstan at 10:54pm ET. https://t.co/6xxCacI1Fd pic.twitter.com/VCQEIdzwHe
— Intl. Space Station (@Space_Station) October 22, 2020
இந்நிலையில், நாசா விண்வெளி வீரர் கிறிஸ் கேசிடி மற்றும் ரஷ்ய விண்வெளி வீரர்களான இவான் வாக்னர் மற்றும் அனடோலி இவானிஷின் ஆகியோர் 196 நாட்களுக்கு பின் பூமிக்கு திரும்பினார்கள்.
196 நாட்கள் விண்வெளியில் இருக்கும் சர்வதேச விண்வெளி நிலையத்தில் பணியாற்றிய அவர்களின் குழுவினர், நேற்று இரவு 7:32 மணிக்கு விண்வெளி நிலையத்திலிருந்து புறப்பட்டு, கஜகஸ்தான், டிஜெஸ்கஸ்கன் பகுதியில் தெற்கே இரவு 10:54 (அந்நாட்டு நேரப்படி காலை 8:54) மணிக்கு தரையிறங்கினார்கள். அவர்களை அப்பகுதி மக்கள் உட்பட பலரும் வரவேற்றனர்.