கதை நாயகன் சூரி… கதாநாயகன் விஜய் சேதுபதி… “விடுதலை” படத்தின் ரகசியத்தை கூறும் வெற்றிமாறன்..!

Default Image

வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, சூரி ஆகியோர் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் விடுதலை. இந்த படத்தில் கெளதம் மேனன், பிரகாஷ் ராஜ், ஸ்ரீ, உள்ளிட்ட பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள். படத்திற்கு இசையமைப்பாளர் இளையராஜா இசையமைத்து வருகிறார்.

Viduthalai

இன்று படத்தின் படத்தின் தமிழ்நாடு திரையரங்க விநியோக உரிமையை வாங்கியது ரெட் ஜெயன்ட் மூவீஸ். படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகும் என இன்று காலையில் போஸ்டருடன் அறிவிப்பு வெளியானது.

Viduthalai

இந்த படத்திற்கான படப்பிடிப்பு தொடங்கி சில ஆண்டுகள் ஆகியும் இன்னும் முடியவில்லை. இதற்கான காரணம் என்னவென்று இதுவரை வெளியாகமல் இருந்த நிலையில், தற்போது விடுதலை படத்திற்கான தாமதம் குறித்து இயக்குனர் வெற்றிமாறன் சமீபத்தில் பேசியுள்ளார்.

இதையும் படியுங்களேன்- கவர்ச்சி கன்னி நீங்க தான்….மாளவிகாவின் கலக்கலான புகைப்படங்கள்.!

viduthalai vetrimaranஇது தொடர்பாக பேசிய “காடு மற்றும் மலைப்பரப்புகளில் கதை நிகழ்வதால், மற்ற இடங்களில் ஒரு நாளில் முடிக்க இயலும் காட்சிகளுக்கு இங்கு 3-4 நாட்கள் தேவைப்படுகிறது.  படத்தின் கிளைமாக்ஸை மிக விரிவாக காட்சிப்படுத்தியிருக்கிறோம். ஸ்கிரிப்ட்டை எழுதுவதிலும் சவால் இருந்தது. இதனால் தான் விடுதலை படம் தாமதமாகிறது என்று கூறியுள்ளார் வெற்றிமாறன்.  மேலும் பேசிய கதை நாயகன் சூரி… கதாநாயகன் விஜய் சேதுபதி என கூறி படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பையும் அதிகப்படுத்தியுள்ளார்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்