பிரதமர் மோடியின் விமானம் பாகிஸ்தான் வான்வெளி வழியாக பறக்க அனுமதி மறுத்துவிட்டது பாகிஸ்தான் அரசு.
இந்திய அரசு காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்படுவதாகவும்,அதனை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்க உள்ளதாகவும் அறிவித்தது.ஆனால் இந்தியாவின் இந்த அறிவிப்புக்கு பாகிஸ்தான் அரசு கடும் கண்டனம் தெரிவித்தது.
இந்த நிலையில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி வருகின்ற 21-ஆம் தேதி அரசு முறை பயணமாக அமெரிக்கா செல்லவுள்ளார்.இதனால் இந்தியா சார்பில் பாகிஸ்தானிடம் அந்நாட்டு வான்வழியாக பறக்க அனுமதிகோரியிருந்தது.இந்த நிலையில் பிரதமர் மோடியின் விமானம் பாகிஸ்தான் வான்வெளி வழியாக பறக்க அனுமதிக்க முடியாது என்பதை இந்தியாவிடம் தெரிவித்துவிட்டோம் என்று பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஷா மெஹ்மூத் குரேஷி தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே பாகிஸ்தான் அரசு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் சென்ற விமானம் பாகிஸ்தான் வான்வெளியில் செல்ல மறுப்பு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.இதனால் இந்தியாவின் கோரிக்கையை மீண்டும் பாகிஸ்தான் அரசு நிராகரித்துள்ளது.
ஜார்க்கண்ட் : மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் சட்டப் பேரவைத் தேர்தல்களில் பதிவான வாக்குகள் இன்று காலை 8மணி முதலே எண்ணப்பட்டு…
மேற்கு வங்கம் : மேற்குவங்கத்தில நடந்த இடைத்தேர்தலில் 6 தொகுதிகளிலும் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. முன்னதாக…
மும்பை : மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு அறிவிக்கப்பட்டு வந்த நிலையில்,…
பீகார் : மாநிலத்தில் பெலகஞ்ச், இமாம்கஞ்ச், ராம்கர் மற்றும் தராரி ஆகிய நான்கு தொகுதிகளின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. தராரி…
கேரளா : கேரளாவின் வயநாடு எம்.பி. பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்ததை அடுத்து, அங்கு அவரது தங்கை கேரளா…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு பிரமாண்டமாகக் கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம்…