ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் குறித்து உலகளவில் விழிப்புணர்வை தீவிரப்படுத்த வேண்டும்பிரதமர் நரேந்திர மோடி
இனி செயல்பட வேண்டும் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் குறித்து உலகளவில் விழிப்புணர்வை தீவிரப்படுத்த வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
நியூயார்க்கில் ஐ.நா.வின் பருவநிலை மாற்றத்திற்கான உச்சிமாநாடு நடைபெற்றது.இதில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார்.அவரது உரையில்,பேசுவதற்கான நேரம் முடிந்துவிட்டது. இனி செயல்பட வேண்டும் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் குறித்து உலகளவில் விழிப்புணர்வை தீவிரப்படுத்த வேண்டும் .நீர் மேலாண்மை, மழை நீர் சேகரிப்பு போன்ற திட்டங்களை தொடங்கியுள்ளோம்.பருவநிலை மாற்றத்தை சமாளிக்க மாபெரும் முயற்சி தேவைப்படுகிறது” என்று தெரிவித்துள்ளார்.