ஐ.நா-வில் “யாதும் ஊரே…யாவரும் கேளிர்” என்ற பிரதமர் நரேந்திர மோடி !
பிரதமர் நரேந்திர மோடி இன்றைய ஐக்கிய நாடுகள் சபையின் 74வது கூட்டத்தில் உரையாற்றியபோது, கடந்த 5 ஆண்டுகளில் தனது அரசு நிகழ்த்திய சாதனைகளையும், இனிமேல் செயல்படுத்தவுள்ள திட்டங்கள் குறித்தும் எடுத்துரைத்தார். அப்போது மோடி ‘தூய்மை இந்தியா’ திட்டத்தின் கீழ் 5 ஆண்டுகளில் 11 கோடி கழிப்பறைகளை கட்டி உலகுக்கே முன்மாதிரியாக இந்தியா திகழ்வதாக குறிப்பிட்டுள்ளார்.
இந்தியா 2025-ம் ஆண்டுக்குள் காச நோய் இல்லாத நாடாக மாறும், 2021ம் ஆண்டுக்குள் 2 கோடி வீடுகள் ஏழைகளுக்கு கட்டித் தரப்படும், இந்தியாவில் 50 கோடி மக்களுக்கு காப்பீடு வழங்கப்பட்டுள்ளது என்றும் பெருமிதத்துடன் தெறிவித்துள்ளார்.
அதுமட்டுமின்றி, பிரதமர் நரேந்திர மோடி தனது உரையின் போது தமிழ் புலவர் கணியன் பூங்குன்றனரின் “யாதும் ஊரே யாவரும் கேளிர்“ என்ற பாடல் வரியை குறிப்பிட்டு விளக்கினார். இந்த வரிகளின் அர்த்த்தை தெளிவாக விளக்கிய மோடி, நாம் அனைவருக்கும் எல்லா இடங்களும் எல்லாருக்கும் சொந்தம் என்றார்.
#WATCH Prime Minister Narendra Modi at #UNGA says, "3000 years back great poet of India Kaniyan Pungundranar, in the oldest language of the world Tamil, said 'Yaadhum Oore Yaavarum Kelir', meaning 'We harbour a feeling of kinship for all places and all people are our own.' pic.twitter.com/7Q8E8Bi0aN
— ANI (@ANI) September 27, 2019