கவர்னருக்கு தனி அதிகாரம் என்பதே கிடையாது…!!! எந்த காலத்திலும் உரிமையை விட்டுத்தர மாட்டோம்…!!!
புதுவை மறைமலையடிகள் சாலையில் சுதேசி மில் அருகே காங்கிரஸ் கட்சி சார்பில் நடந்த உண்ணாவிரத பேராட்டத்தில் பங்கேற்று முதல்-அமைச்சர் நாராயணசாமி பேசியது கவர்னர் மத்திய அரசின் பிரதிநிதியாக இருக்கலாம். ஆனால், மாநில உரிமைகளை தட்டிப் பறிக்க உறுதுணையாக இருக்கக் கூடாது. இதனை மக்கள் மன்றத்தில் கூறுவதை தவிர வேறு வழியில்லை. மக்கள் தான் நம்முடைய பிரதிநிதிகள்.
இதுதொடர்பாக ஜனாதிபதி, பிரதமர், மத்திய மந்திரிகளை சந்தித்து பேசினோம் அனைவரும் கேட்கிறார்களே தவிர பதில் சொல்லவில்லை எந்த காலத்திலும் நமது உரிமையை விட்டு தரமாட்டோம். புதுச்சேரி மாநிலம் டெல்லி அல்ல தமிழகத்திற்கு என்ன உரிமை உள்ளதோ அதே உரிமை புதுச்சேரி மக்களுக்கும், அமைச்சரவைக்கும் உள்ளது.
சட்டம்-ஒழுங்கு, நிதி நிலை, நிலம், நிர்வாகம் முழுவதும் மாநில சட்டமன்றத்திற்குட்பட்டது கவர்னர் மாநில சம்பந்தமான பிரச்சினைகள், திட்டங்களுக்கு அமைச்சரவையின் பரிந்துரையின் பேரில் தான் செயல்பட வேண்டும் மத்திய-மாநில அரசுகள் இணைந்து எடுக்கப்படும் திட்டங்களுக்கு முதல்-அமைச்சரின் பரிந்துரைப்படி கவர்னர் செயல்பட வேண்டும் கவர்னருக்கு என்று தனியாக அதிகாரம் கிடையாது என கூறினார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்