"நவராத்திரி கொழுபொம்மை" ஏன்…? மண்ணால் செய்து வழிபடுகிறோம்..!!தெரியுமா…??
விழாக்களில் கோலாகலமாக கொண்டாடப்படும் விழா நவராத்திரி 9 நாட்கள் வீடுகளில் சிறப்பாக கொண்டாடப்படும் விழாவாகும்.வீட்டில் உள்ள எல்லோரும் உற்சாகத்தோடு பரபரப்பாக மண்ணால் ஆன கொழுபொம்மைகளை வைக்க ரெடியாக இருக்கும் 9, 7,5 என படிகட்டுகளில் அடுக்கி வைத்து அலங்கரிப்போம் வீடே திருவிழா கோலாம் பூண்டு காணப்படும்.
இதனால் வீட்டில் சந்தோஷ மட்டுமல்லாமல் லட்சுமி கடாஷ்சமும் ஏற்படும்.9 நாட்களும் அம்பாளை வீட்டில் இருக்க வைத்து வணங்கும் அற்புதமான நிகழ்வை நவராத்திரி அளிக்கிறது.இந்த தருணத்தில் சக்தியின் வீரத்தையும்,லட்சுமிதேவியின் அருளையும்,சரஸ்வதி தேவியின் ஞானத்தையும் பெற்று சீரோடும்,சிறப்போடும் வாழ்வோம்.
நவராத்திரி என்றலே கொழு பொம்மை தான் நினைவிற்கு வரும் அந்த பொம்மைகளை ஏன் மண்ணினால் செய்து வழிபடுகிறோம் என்று நினைத்தது உண்டா..?இதற்கு உண்டான பதிலை புராணங்கள் சொல்கிறது.மேலும் ஏன் கொழுபொம்மை வைத்து வணங்கிறோம் என்றும் கூறிகிறது.
நவராத்தியில் “கொலுவில் பொம்மைகள்” வைக்கும் வழக்கம்…!
முற்காலத்தில் சுரதா என்ற அரசன் தன் நாட்டை நன்றாக ஆண்டு வந்தான்.திடீரென்று தன் நாட்டின் மீது எதிரி நாட்டு படைகள் போர் செய்ய வந்தார்கள்.
தன் நாட்டின் பலத்தை அறிந்து கொண்டு சுரதா அவர்களிடம் போர் புரிந்து ஜெயிப்பது என்பது ஆகாத காரியம்.எனவே அத்தனை வலிமை தன்னிடமும், தன் நாட்டிடமும் இல்லை என்பதை உணர்ந்தது தனது குருவான சுமதாவிடம் சென்று ஆலோசனை கேட்டார்.மன்னனின் கவலை அறிந்த குரு ஒரு வழியை அரசனிடம் கூறினார் நீ காளியை வணங்கினால் எதிரிகள் உன்னை விட்டு விலகி விடுவார்கள் என்றார்.
காளியை எப்படி வணங்குவது என்று தெரியாமல் திணரிய அரசன் அம்பாள் தண்ணீரையும், மணலையும் லிங்கமாக செய்து சிவபெருமானை அம்பிகை வழிப்பட்டது போல் தானும் காளிதேவியை மண்ணால் சிலைசெய்து வழிப்படவேண்டும் என்று உதித்த விருப்பத்தினால் மணலால் அன்னையின் உருவத்தை செய்துவழிப்பட்டார் மன்னர் சுரதா.
அரசனின் அன்பை கண்டும் வழிபாட்டை கண்டும் மகிழ்ந்த காளிதேவி, அரசரின் தவத்தை ஏற்று, மன்னருக்கு எதிரிகளை வெல்லும் சக்தியை அருளினாள்.
மன்னனிடம் காளி தேவி பஞ்சபூதங்களில் ஒன்றான மணலால் என்னை பூஜித்து வணங்கியதால், உனக்கு சகல நலங்களும், வளங்களும் கிடைக்கும் என்று கூறி வரமளித்து மறைந்தாள்.மன்னனை நோக்கி போரிட வந்த படை போன இடம் தெரியாமல் போனது. இந்த மன்னனின் வழிபாட்டிற்கு பிறகுதான் மண்ணால் உருவாகும் பொம்மைகள் இடம் பெற்றது என புராணங்கள் கூறுகிறது.
மேலும் இதற்கு மற்றொரு தத்துவமும் உண்டு மண் ஆனது தான் எதுலிருந்து உருவாகியதோ அதிலே கரைந்து விடும் அதனை போல நம்மை படைத்த அந்த இறையிடமே நாம் மீண்டும் செல்கிறோம் என்பதை உணர்த்துகிறது.
நம் முன்னோர்கள் கூறிய அனைத்திலும் ஆன்மீகம் என்னும் அற்புதம் பொதுந்து கிடைக்கிறது.அதனை ஏணியாக கொண்டும் நாமும் இறையை அடைய வேண்டும் என்பத இப்பிறவியின் நோக்கமாகும்.
நவராத்திரி கொழுபொம்மையினால் நாம் ஒவ்வொருவரின் வாழ்விலும் சந்தோஷம் எனும் கொண்டாட்டம் கொட்டட்டும் இறைவனையும் நாயகியையும் நன்றாக கும்பிட்டு வழிபடுவோம் நலம்….,
DINASUVADU