3 ஆண்டுகளாக கிடப்பில் கிடக்கும் ‘நரகாசுரன்’.! ஒரு வழியா ரிலீஸ் குறித்து முடிவு செஞ்சிட்டங்க போல.?

3 ஆண்டுகளாக கிடப்பில் கிடக்கும் கார்த்திக் நரேனின் நரகாசுரன் படத்தினை ஓடிடியில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழ் சினிமாவில் இளம் வயதில் இயக்குனராக அறிமுகமானவர்களில் கார்த்திக் நரேனும் ஒருவர். தன்னுடைய 22வது வயதில் 2016ல் வெளிவந்த துருவங்கள் 16 படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இரண்டாவது படமாக நரகாசூரன் படத்தை எடுத்து முடித்துவிட்டார். ஆனால், அப்படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான இயக்குனர் கவுதம் மேனனுக்கு ஏற்பட்டுள்ள பிரச்சினையால் அப்படம் வெளியாகாமலேயே உள்ளது.
கௌதம் மேனன் தயாரிப்பில் கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகவுள்ள நரகாசுரன் படத்தில் அரவிந்த் சாமி, ஸ்ரேயா சரண்,ஆத்மிகா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.பொருளாதார பிரச்சினைகளால் இன்னும் ரிலீஸாகமல் உள்ள நரகாசுரன் படத்தின் ரிலீஸ் குறித்த தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது.அதாவது கார்த்திக் நரேன் இரண்டாவதாக இயக்கிய நரகாசுரன் படத்தினை ஓடிடியில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.இது எந்தளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை.விரைவில் இதனை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.தற்போது கார்த்திக் நரேன் தனுஷின் D43 படத்தினை இயக்கி வருவது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
‘அந்த இடத்திற்கு செல்லாததால் தப்பிய தமிழர்கள் 68 பேர்’ – சுற்றுலா சென்ற மதுரை நபர் சொன்ன தகவல்.!
April 23, 2025
பயங்கரவாத தாக்குதலில் தமிழர் சந்துரு சிக்கினாரா.? நடந்தது என்ன? மனைவி கொடுத்த விளக்கம்.!
April 23, 2025