இஸ்ரேலின் புதிய பிரதமராக நஃப்தாலி பென்னெட் பொறுப்பேற்றுள்ளார்!

Default Image
  • இஸ்ரேலில் ஆட்சி செய்து வந்த பெஞ்சமின் நெதன்யாகு தனது பெரும்பான்மையை நிரூபிக்கவில்லை.
  • இதனை அடுத்து தற்பொழுது இஸ்ரேலில் புதிய பிரதமராக நஃப்தாலி பென்னெட் பொறுப்பேற்று உள்ளார்.

இஸ்ரேலில் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அவர்கள் தலைமையிலான லிக்குட் கட்சி 54 இடங்களில் வெற்றி பெற்றது. இருப்பினும் ஆட்சி அமைப்பதற்கு 61 இடங்களில் வெற்றி பெற வேண்டும் என்பதால் புதிய அரசு அமைப்பதற்கு பெரும்பான்மையை நிரூபிக்க பெஞ்சமின் நெதன்யாகுக்கு 28 நாள் காலக்கெடு கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்தக் காலக்கெடுவுக்குள் அவரால் தனது பெரும்பான்மையை நிரூபிக்க முடியாததால், மீண்டும் இஸ்ரேலில் பொது தேர்வு நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் தற்போது திடீர் திருப்பமாக எதிர்க் கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து தேசிய ஒற்றுமை அரசை கூட்டணியாக உருவாகியுள்ளது. இந்நிலையில் இந்த எதிர்க்கட்சி கூட்டணியில் வலதுசாரி கட்சி, தீவிர வலதுசாரிக் கட்சி, அரபு ஆதரவு உள்ளிட்ட பல காட்சிகளும் இடம்பெற்றுள்ளன. பலவித கொள்கைகளை கொண்ட இந்த கட்சிகளின் கூட்டணி தற்பொழுது கடந்த தேர்தலில் இரண்டாவது இடத்தை பிடித்த யேஷ் ஆதித் கட்சியின் தலைவர் தலைமையில் உருவாகியுள்ளது. இந்நிலையில், இந்த கூட்டணியில் முக்கிய கட்சியாக தீவிர வலதுசாரிக் கட்சியான யாமினா கட்சி இடம்பெற்றுள்ளது.

இந்த கட்சியின் தலைவர் நஃப்தாலி பென்னெட் ஏற்கனவே இஸ்ரேல பாதுகாப்பு துறை முன்னாள் மந்திரியாக இருந்துள்ளார். இந்நிலையில், ஆட்சி அமைக்க தேவையான பெரும்பான்மையை நிரூபிக்க இஸ்ரேலிய பாராளுமன்றத்தில் நேற்று வாக்கெடுப்பு நடைபெற்றது. இந்த வாக்கெடுப்பில் யெயர் தலைமையிலான எதிர்க்கட்சிக் கூட்டணி பெரும்பான்மை நிரூபித்ததால் 12 ஆண்டு காலமாகப் பிரதமராக செயல்பட்டு வந்த பெஞ்சமின் நெதன்யாகு ஆட்சி முடிவுக்கு வந்துள்ளது.

இதனை அடுத்து பாராளுமன்றத்தில் பெரும்பான்மை நிரூபித்த யெயர் தலைமையிலான கூட்டணி கட்சிகள் மூலம் புதிய பிரதமராக யாமினா கட்சி தலைவரும், முன்னாள் பாதுகாப்புத் துறை மந்திரியும் ஆகிய நஃப்தாலி பென்னெட் அவர்கள் பிரதமராக பொறுப்பேற்றுள்ளார். இஸ்ரேல் நாட்டின் புதிய பிரதமராக நஃப்தாலி பென்னெட் பொறுப்பேற்றதற்கு உலக தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். மேலும் புதிய பிரதமர் நஃப்தாலி பென்னெட் 12 ஆண்டுகள் மட்டுமே இஸ்ரேல் பிரதமராக செயல்படுவார், மீதமுள்ள அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு எதிர்க்கட்சித் தலைவரான யெயர் தான் பிரதமராக செயல்படுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்