'நானும் ரௌடிதான்' 4வது வருட சிறப்பு கொண்டாட்டம் !

2015ம் ஆண்டு விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் நயன்தாரா நடிப்பில் வெளிவந்த படம் தான் ‘நானும் ரௌடிதான்’. இப்படம் அக்.21ம் தேதி வெளியிடபட்டு ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வெற்றியை பெற்றது. இப்படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
இப்படத்தை நடிகர் தனுஷ் தயாரித்துள்ளார். இந்த படம் தெலுங்கிலும் மாபெரும் வெற்றியை பெற்றுள்ளது. இந்நிலையில், இப்படம் அக்.21ம் தேதியான இன்று தனது 4வது வருடத்தை சிறப்பாக கொண்டாடி வருகிறது. இதை விஜய் சேதுபதியின் ரசிகர்களும் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.