சூர்யாவுடன் 20 வருடங்களுக்கு பிறகு இணையும் பிரபல நடிகர்..?

சூர்யாவின் 40 வது படத்தில் சூர்யாவுடன் 20 ஆண்டுகளுக்கு பிறகு பிரபல நடிகரான ராஜ்கிரண் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.
நடிகர் சூர்யா தற்போது தனது 40 வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை இயக்குனர் பாண்டிராஜ் இயக்குகிறார். இசையமைப்பாளர் இமான் இசையமைக்கும் இந்த படத்தை சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. படத்தில் நடிகர் சூர்யாவிற்கு ஜோடியாக நடிகை பிரியங்கா அருள் மோகனன் நடித்துவருகிறார். இந்த படத்தில் சத்யராஜ், சரண்யா, சூரி, தேவதர்ஷினி, போன்றோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.
இந்த நிலையில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் படப்பிடிப்பு வருகின்ற ஆகஸ்ட் மாதத்திற்குள் முடித்து படத்தை அக்டோபர் மாதம் 14 ஆம் தேதி ஆயுத பூஜை அன்று வெளியீட படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்திற்கான டைட்டில் விரைவில் அறிவிக்கப்படவுள்ளது.
இந்த நிலையில் தற்போது இந்த படத்தில் சூர்யாவுடன் 20 ஆண்டுகளுக்கு பிறகு பிரபல நடிகரான ராஜ்கிரண் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் நடிகர் ராஜ்கிரண் சூர்யாவுடன் கடைசியாக நந்தா படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
நெல்லையில் பரபரப்பு: நாங்குநேரி மாணவன் சின்னத்துரை மீது மீண்டும் தாக்குதல் நடத்திய கும்பல்.!
April 16, 2025
மாஸ்காட்டிய அபிஷேக்-ராகுல்.., பவுலிங்கில் மிரட்டிய ஆர்ச்சர்.. ராஜஸ்தானுக்கு இது தான் இலக்கு.!
April 16, 2025
“அஜித் ரசிகனா இல்லனா, வாழ்க்கைல நான் என்னவாகி இருப்பேன்னு தெரியல” – இயக்குநர் ஆதிக்.!
April 16, 2025
தொடர்ந்து பேட்டை சோதனை செய்யும் அம்பயர்கள்! காரணம் என்ன?
April 16, 2025