மாஸ் ஹீரோ சிவகார்த்திகேயனின் அடுத்த அதிரடி! ‘நம்ம வீட்டு பிள்ளை’ முதல் போஸ்டர் மற்றும் சில தகவல்கள்!

சிவகார்த்திகேயன் தற்போது பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இவர் அடுத்ததாக ‘கடைக்குட்டி சிங்கம்’ இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் புதிய படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தை சன் பிக்ச்சர்ஸ் தயாரித்துள்ளது.
இப்படம் செப்டம்பர் மாதம் அதாவது ஆயுத பூஜையை முன்னிட்டு வெளியாக உள்ளது. இப்படத்தில் இமான் இசையமைத்துள்ளார். ஐஸ்வர்யா ராஜேஷ், அனு இம்மானுவேல், பாரதிராஜா, சமுத்திரக்கனி, சூரி என பலர் நடித்துள்ளனர்.
இப்படத்திற்கு முதலில் எங்க வீட்டு பிள்ளை என தலைப்பு பரிசீலனையில் இருந்த நிலையில், தற்போது இந்த பட தலைப்பு நம்ம வீட்டு பிள்ளை என அறிவித்து முதல் போஸ்டரையும் படக்குழு வெளியிட்டுள்ளது.