தெலுங்கில் உருவாகியுள்ள இந்த பாடலை ராமகிருஷ்ணன் எழுத எஸ்கே. பாலசந்தரின் இசையமைத்து பாடியுள்ளார். தற்போது இந்த பாடல் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.
உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் மே 31 வரை நான்காம் கட்ட ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளது. மேலும் சில மாவட்டங்களுக்கு ஊரடங்கில் தளர்வு செய்யவும் ஆணை பிறப்பித்துள்ளது. பலரின் அயராத முயற்சியால் பட இடங்களில் கொரோனா தொற்று கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் கொரோனா வைரஸ்க்கு எதிராக போராடும் பிரதமர் மோடி மற்றும் அரசுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் பாடல் ஒன்றை நடிகை நமீதா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
மோடி, நரேந்திர மோடி என்று தொடங்கும் அந்த பாடலில் கொரோனாவிற்கு எதிராக பிரதமர் மோடி எடுத்து வரும் நடவடிக்கைகளையும், பாகிஸ்தான் எதிராக எடுத்த சர்ஜிக்கல் ஸ்டிரைக்கையும், விமானப்படை வீரரான அபிநந்தனை பாகிஸ்தானிலிருந்து மீட்பதற்காக எடுத்த நடவடிக்கைகள் குறித்தும் பாடல் வரிகளாக எழுதியுள்ளனர். தெலுங்கில் உருவாகியுள்ள இந்த பாடலை ராமகிருஷ்ணன் எழுத எஸ்கே. பாலசந்தரின் இசையமைத்து பாடியுள்ளார். தற்போது இந்த பாடல் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது. நமீதா சமீபத்தில் பாஜக கட்சியில் சேர்ந்தது குறிப்பிடத்தக்கது.
\
சென்னை : உரிமை மீட்க தலைமுறை காக்க நடைப்பயணம் என்ற பிரச்சார பயணத்தை ஜூலை 25ல் அன்புமணி தொடங்கினார். ஆனால்,…
கேரளா : சத்தீஸ்கரில் இரண்டு மலையாள கன்னியாஸ்திரிகள் கைது செய்யப்பட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சிரோ மலபார் திருச்சபை இதைக் கண்டித்து…
பாட்னா : பீகாரின் பாட்னா மாவட்டத்தில் உள்ள மசௌர்ஹி பகுதியில், " நாய் பாபு, S/o, குட்டா பாபு'' என்ற…
நெல்லை : தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 4 படுகொலை சம்பங்கள் அரங்கேறியுள்ளன. நெல்லை, மதுரை, சென்னை, ஈரோடு…
சிவகாசி : முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி, இன்று சிவகாசியில் நடந்த அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில், 2026…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய், தி.மு.க. மற்றும் பா.ஜ.க.வின் அரசியல் நாடகங்களை தமிழக மக்கள் ஏற்க…