வரப் போற பொண்ண சமையல் கூட செய்ய விடமாட்டார் போல நம்ம சிம்பு.!

சிம்பு சமையல் செய்ய விடிவி கணேஷ் அவரிடம் பேசும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி யுள்ளது.
தமிழ் சினிமாவில் பல சர்ச்சைகளுக்கு உள்ளனாலும் பிரபல முன்னணி நடிகராக திகழ்பவர் தான் சிம்பு. அவருக்கென்றே ரசிகர்கள் கூட்டம் அதிகமாகவே உள்ளது என்று கூறலாம். இவர் தற்போது நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடித்து கொண்டிருக்கும் திரைப்படம் மாநாடு.இந்த படத்தை வெங்கட் பிரபு இயக்கி சுரேஷ் காமாட்சி தயாரித்து இருக்கிறார். இதனையடுத்து, இந்த படத்தின் படப்பிடிப்பு பல சர்ச்சைக்கு பின்னர் 2 மாதங்களுக்கு முன்பு தான் தொடங் கப்பட்டது . தற்போது பரவி வரும் கொரோனா வைரஸ் காரணமாக சிங்கப்பூரில் நடந்து வந்த படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டது.
தற்போது ஊரடங்கு காரணமாக பல பிரபலங்கள் சமையல் வேலைகளை செய்தும், உடற்பயிற்சி செய்தும், புதிய முறைகளை படித்து கையாளுவதும் போன்ற வீடியோக்களையும், பழைய புகைப்படங்களையும் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வருகின்றனர். சமீபத்தில் சிம்பு வீட்டை சுற்றி ஓடி ஜாகிங் செய்யும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகியது. இந்த நிலையில் தற்போது சிம்பு சமையல் செய்ய விடிவி கணேஷ் அவரிடம் பேசும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி யுள்ளது. அதில் வர போற பொண்ணுக்கு வேலையே இல்லாமா பண்ணிடுவீங்க போல என்று கணேஷ் கேள்வி கேட்க,
மேலும் அதற்கு சிம்பு அந்த பொண்ணு கல்யாணம் பண்ணிக்கிட்டு வேலை செய்யவா வராங்க, அந்த பொண்ணு வேலைகாரினு நினைச்சீங்களா, அது எல்லாம் உங்கள் காலம், பொண்ணு வாழ்க்கை துணையாக இருக்க வராங்க, முதலில் துணையை எப்படி பாத்துகணும் என்று தெரிந்து கொள்ளுங்கள். வர போற பொண்ணை வேலைக்காரி மாதிரி பாக்குறதுக்கு நான் உங்கள மாதிரி ஆள் கிடையாது என்று கூறியுள்ளார். தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.
New idea:
Simbu should start his own OTT platform just documenting his life as a reality show with 0 edits.
I will cancel my Netflix and Prime subscription and pay money for this instead????????#SilambarasanTR pic.twitter.com/390pjRzkuj— Raunaq Mangottil (@RaunaqMangottil) May 14, 2020
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025