நமது உடலுக்கு தேவையான அனைத்து சத்துக்களையும் கொண்ட பாகற்காய்….!!!
பாகற்காய் நமது அருகாமையில் உள்ள சந்தைகளில் மிக மலிவாக கிடைக்கக்கூடிய ஒரு காய்கறி தான். ஆனால் இதனை மிக குறைவானவர்களே விரும்பி சாப்பிடுவர். ஏனென்றால் இதில் கசப்பு தன்மை உள்ளதால் பலர் இதனை உண்பதில்லை. ஆனால் இதில் நமது உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய அனைத்து சத்துக்களும் உள்ளது.
சத்துக்கள் :
பாகற்காயில் வைட்டமின் ஏ, பி, சி, பீட்டா – கரோட்டின் போன்ற ஃப்ளோவனாயிடுகள், லூடின், இரும்புசத்து, ஜிங்க், பொட்டாசியம், மாங்கனீசு, மக்ரிஸியம் போன்ற தாது சத்துக்கள் பாகற்காயில் உள்ளது.
பயன்கள் :
- பாகற்காய் ஆஸ்துமா, சளி, இருமல் போனற பிரச்சனைகளுக்கு சிறந்த நிவாரணியாக உள்ளது.
- பாகற்காய் சாறு ஈரல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை தீர்க்கிறது.
- நமது உடலில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்கிறது.
- பாகற்காயுடன், எலுமிச்சை சாற்றை காலத்து அருந்தி வந்தால் முகம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு தீர்வளிக்கிறது.
- நீரழிவு நோயை கட்டுப்படுத்துகிறது.
- சிறுநீரகம் மற்றும் சிறுநீர்ப்பையின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
- இதயநோய் ஏற்படுவதிலிருந்து பாதுகாக்கிறது.
- புற்றுநோய் செல்கள் உருவாகுவதை தடுக்கிறது.