இரவில் நிர்வாணமாக தூங்குவதால் கிடைக்கும் நன்மைகள் ..!
இரவில் ஆடைகள் இன்றி நிர்வாணமாக தூங்குவதால் பல்வேறு நன்மைகளை பெற முடியும் என்று ஆய்வுகள் கூறுகின்றது.
அதனால் உண்டாகும் 4 அற்புத நன்மைகள்:
நல்ல உறக்கம்
தூக்கம் என்பது நம் மூளை நரம்புகளில் உள்ள நச்சுக்களை நீக்கும் ஒரு செயல். எனவே இரவில் நன்கு தூங்கினால் மூளையின் செயல்பாட்டு திறன் அதிகரிக்கும். எனவே இரவில் ஆடையின்றி தூங்கினால் நல்ல தூக்கம் உண்டாகும். அதனால் உடலின் வெப்ப அளவு குறையும்.
மன அழுத்தம்
அதிகப்படியான மன அழுத்தம் நமது உடல் ஆரோக்கியத்தையே கெடுத்துவிடும், இதனை தடுக்க நல்ல உறக்கமே சிறந்த மருந்தாகும்.
உடல் எடை
இரவில் ஆடைகள் இல்லாமல் தூங்கினால், நம் உடலின் வெப்ப அளவு குறைந்து, ரத்த ஓட்டம் சீராகும். இதனால் நம் உடல் குளிர்ச்சி அடைந்து உடல் எடையை குறைக்கும்.
தன்னம்பிக்கை
இரவில் ஆடைகளின்றி தூங்குவதால் தனது உடலின் மீதான நம்பிக்கையும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும் என்று உளவியலாளர்கள் கூறுகின்றனர்.