‘வாழ்வை வளமாக்கும் வழிபாடுகள் ‘ – பூஜையின் போது கவனிக்க வேண்டியவை..!
நம் அன்றாட வாழ்வில் இறை உடனே தொடங்கி அன்றைய பொழுதும் இறை உடனே நிறை பெறுகின்றது. எல்லாம் அவன் செயல் உலகை நடத்துவதும் அவனே நம்மை நடத்துவதும் அவனே இப்படி இறை சிந்தனையில் மூழ்கி இருப்பவர்களுக்கு இறைவனே அனைத்தும் நாம் தினமும் மேற்கொள்ளும் வழிபாடுகள் எல்லாம் நம் வாழ்க்கையை மாற்றி அமைத்து தான் உள்ளது.
பொதுவாக இறை நம்பிக்கை உள்ளவர்களிடம் உரையாடும் போது கூறுவார்கள் காலை எழுந்து கடவுளை வணங்கமால் இருந்தால் அன்றைய பொழுதே சரியில்ல என்று புலம்புவர்களே அதிகம் கண்டுள்ளோம் அப்படி இறைவனை சிந்தையில் இருத்தி பூஜிக்கும் நாம் அதில் சிலவற்றை கடைபிடிக்க வேண்டும் அவை என்னவென்று பார்ப்போம்.
இறைவனுக்கு செய்கின்ற பூஜையானது முறைப்படி செய்தால் அதற்கு பலன் அதிகமாக கிடைக்கும் அப்படி பூஜையின் போது சுவாமி, அம்பாள் படங்களுக்கு இடது புறம் பழங்கள் மற்றும் வலது புறம் பலகாரங்களை வைப்பது மிகவும் நல்லது.
அதே போல் வீட்டில் தூபம் காட்டி வழிபடுவதை வழக்கமாக வைத்துள்ளோம் அப்படி தூபம் காட்டும் போது சுவாமியினுடைய இடது புறத்தில் தூப கரண்டி மற்றும் வலதுபுறத்தில் கற்பூரத்தட்டை வைப்பது நலம் பயக்கும்.
சுவாமிக்கு பஞ்ச பாத்திரத்தில் தீர்த்தம் வைப்போம் அதனை இறைவனுக்கு படைத்த பின்னர் வீட்டில் உள்ள அனைவரும் தீர்த்தம் பருகிய பிறகு மீதம் உள்ள தீர்த்தத்தை அடுத்த நாள் செடி அல்லது மரங்களுக்கும் ஊற்றவேண்டும்.தீர்த்தம் காலில் மிதி படும் வண்ணம் கீழே ஊற்றக் கூடாது.
பூஜை அறையை அன்றாடம் சுத்தம் செய்து மலர்களால் அலங்கரித்து மாகோலமிட்டு வழிபடுவது நல்லது.அதனோடு சுவாமிக்கு பிடித்த பிரசாதம் படைத்து வழிபட்டால் மிகவும் நல்லது.
மேலும் தீபம் ஏற்றி வழிபடும் போது அதனுடன் இறைவனை போற்றும் பாடல்கள், ஸ்லோகங்கள் , நாமம் ஆகியவற்றை உச்சரித்து மனமுருகி பாடி பூஜை செய்வது மிகவும் சிறந்தது.வீட்டில் உள்ள அனைவரும் பாடினால் குடும்பம் மேன்மை பெறும் கூட்டு பிராத்தனை மிகுந்த பலனை அளிக்க வல்லது.