‘குக் வித் கோமாளி’ புகழை இயக்குனர் ஷங்கரின் பெயரை சொல்லி ஏமாற்றிய மர்ம நபர்.!

குக் வித் கோமாளி புகழை மர்மநபர் ஒருவர் இயக்குனர் ஷங்கரின் பெயரை சொல்லி ஏமாற்றியதாக கூறியுள்ளார்.
குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் புகழ்.தனது காமெடியால் அனைவரையும் கவர்ந்துள்ள இவருக்கு பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது.சமீபத்தில் இவர் அருண் விஜய்யின் 33-வது படத்தில் நடிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.அதன் பின் தல அஜித்தின் வலிமை,தளபதி 65, சிவகார்த்திகேயனின் டான் உள்ளிட்ட படங்களிலும் புகழ் நடித்து வருவதாக தகவல்கள் வெளியாகியிருந்தது.
சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் இயக்குனர் ஷங்கரின் பெயரை சொல்லி தன்னை ஏமாற்றியதாக புகழ் கூறியுள்ளார். இயக்குனர் ஷங்கர் அலுவலகத்தில் இருந்து பேசுவதாகக் கூறி தனக்கு ஒரு அழைப்பு வந்தது.தொலைப்பேசியில் பேசிய அவர் தன்னை கிண்டிக்கு வர சொன்னார். நான் அங்கே சென்று அவரை அழைத்த போது அந்த செல்போன் எண் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டு இருந்தது.நாங்கள் நிகழ்ச்சியில் மட்டும்தான் கோமாளி, சிலர் நிஜத்திலும் நாங்கள் கோமாளியாக இருப்போம் என்று நினைக்கிளார்கள் என தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
ஆரம்பத்தில் திணறிய மும்பை.. வெளுத்து வாஙகிய சூர்ய குமார்.! டெல்லி அணிக்கு இதுதான் டார்கெட்.!
May 21, 2025
175 பில்லியன் டாலரில் அமெரிக்காவை பாதுகாக்க `கோல்டன் டோம்’.., டிரம்ப் அறிவித்த திட்டம் என்ன?
May 21, 2025