ரஷ்யாவில் உள்ள லோபசெவ்ஸ்கை பல்கலைக்கழகத்தில் பயின்று வந்த கேத்தரின் எனும் அமெரிக்க மாணவி மர்மமான முறையில் மரணமடைந்துள்ளார்.
ரஷ்யாவில் உள்ள நிஜ்னி நவ்கரோடு பகுதியில் உள்ள லோபசெவ்ஸ்கை என்னும் பல்கலைக்கழகத்தில் பயின்று வந்த 34 வயதுடைய கேத்தரின் எனும் அமெரிக்காவை சேர்ந்த மாணவி கடந்த செவ்வாய்க்கிழமை திடீரென பல்கலைக்கழகத்தில் இருந்து காணாமல் போயுள்ளார். கடந்த வியாழக்கிழமை இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, போலீசார் தீவிர விசாரணையை மேற்கொண்டுள்ளனர். இதனையடுத்து கடைசியாக அந்த பெண்மணி தனது தாயாருக்கு குறுஞ்செய்தி ஒன்று அனுப்பியுள்ளார். அதில் நான் கடத்தப்படவில்லை என்று நம்புகிறேன் என தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து அந்த செல்போனின் டவர் வைத்து விசாரித்த பொழுது மருத்துவமனைக்கு செல்வதற்காக சென்ற கார் காட்டுக்குள் சென்றுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் அந்தப் பெண்மணியின் செல்போன் அழைப்பு காட்டுக்குள் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. இதனை அடுத்து 40 வயதுடைய நபர் ஒருவரை தற்பொழுது விசாரணைக்காக போலீசார் கைது செய்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த பெண்மணி உயிரிழந்து விட்டதாகவும் போலீசார் தரப்பில் கூறப்படுகிறது. மேலும், என்ன நடந்துள்ளது என்பதை உன்னித்து கவனித்து வருவதாக அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.
சென்னை : இவர்களுக்குள் இப்படியா? என்கிற வகையில் அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்தது என்றால் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுடைய விவாகரத்து தான். 29…
மும்பை : இந்தியாவில் பல இடங்களில் சையத் முஷ்டாக் அலி டிராபி நடைபெற்று வருகிறது. இதில், இந்திய அணியின் மூத்த…
சென்னை : ஐயா விடாமுயற்சி அப்டேட் கொடுங்க என அஜித் ரசிகர்கள் அந்த படத்தின் அப்டேட்டை தினமும் தயாரிப்பாளரிடம் கேட்டுக்கொண்டு வருகிறார்கள்.…
வாஷிங்டன் : அமெரிக்காவில் சூரிய மின்சக்தித் திட்டத்தில் முதலீட்டாளர்களை ஏமாற்றியதாகவும், அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாகவும் கவுதம் அதானி மீது பல…
உத்திரபிரதேசம் : மாநிலத்தில் சம்பல் என்ற ஷாஹி ஜமா மசூதி ஒன்று இருக்கிறது. ஆனால், இந்த மசூதி இங்கு இருப்பதற்கு முன்னதாக…
சென்னை : தமிழகத்தின் முதல் பெண் முதல்வரும், எம்ஜிஆரின் மனைவியுமான மறைந்த ஜானகியின் நூற்றாண்டு விழா அதிமுக சார்பில் வானகரத்தில்…