விக்ரம் படத்தில் இணைந்த மைனா நந்தினி.!

விக்ரம் படத்தில் நடிப்பதை நடிகை நந்தினி நடிப்பது உறுதியாகியுள்ளது.
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பஹத் பாசில், ஆகியோரது நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம். “விக்ரம்” இந்த படத்தில் ஷிவானி நாராயணன், நந்தினி, மகேஸ்வரி, ஆகியோர் நடித்தப்பதாக தகவல்கள் கசிந்து தகவல் பரவியது. இந்த நிலையில், இதனை உறுதிப்படுத்தும் விதமாக நடிகை நந்தினி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இயக்குனர் லோகேஷ் கனகராஜுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு “உங்களுடன் பணியாற்றுவதில் மகிழ்ச்சி” என்று பதிவிட்டுள்ளார்.
View this post on Instagram
இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு ‘விக்ரம்’ படத்தின் படப்பிடிப்பு அதிகாரப்பூர்வமாக சென்னையில் தொடங்கியது. அதனைத்தொடர்ந்து படக்குழு காரைக்குடி சென்றுள்ளது. காரைக்குடியில் படப்பிடிப்பு தொடர்ந்து நடந்து வருகிறது.
இந்த படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் நடிகர் கமல்ஹாசன் தயாரிக்கிறார். ஒளிபதிவளராக கிரிஷ் கங்காதரன் பணியாற்றி வருகிறார். படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.