ஆண்குழந்தையை பெற்றெடுத்தார் மைனா நந்தினி.!
மைனா நந்தினிக்கு தற்போது ஆண்குழந்தை பிறந்துள்ளதாக கணவரான நடிகர் யோகேஸ்வரன் அறிவித்துள்ளார்.
சரவணன் மீனாட்சி தொடரின் மூலம் மைனாகவாக அறிமுகமானவர் நந்தினி. அதன் பின்னர் இவரை மைனா நந்தினி என்று சொன்னாலே அறிவார்கள். அதனையடுத்து, பிரியமானவள் கல்யாணம் முதல் காதல் வரை, சின்னதம்பி, அரண்மனை கிளி, டார்லிங் டார்லிங் உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்து மிகவும் பிரபலமாக வலம் வருகிறார் நந்தினி. அதனையடுத்து ராஜா ராணி, கேடி பில்லா கில்லாடி ரங்கா, வம்சம், நம்ம வீட்டு பிள்ளை உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார். கடந்த நவம்பர் மாதத்தில் தான் நடிகரான யோகேஸ்வரன் என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டார்.
சமீபத்தில் மைனா அளித்த பேட்டி ஒன்றில் தான் கர்ப்பமாக இருப்பதாக கூறியுள்ளார். அதனையடுத்து சமீபத்தில் தான் மைனாவிற்கு வளைக்காப்பு நடத்திய வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலானது குறிப்பிடத்தக்கதாகும். இந்த நிலையில் தற்போது இந்த தம்பதியிருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதாக யோகேஸ்வரன் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் தெரிவித்துள்ளார். எனவே இந்த தம்பதியருக்கு பல பிரபலங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.