கொரோனா தடுப்பூசி மையங்கள் அருகில் இருப்பதைக் கண்டறிய மத்திய அரசானது வாட்ஸ்அப் தகவல் உதவி மையத்தை தொடங்கியுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலையானது தொடர்ந்து தீவிரமாகப் பரவி வருகிறது.எனவே,கொரோனா பரவலை தடுக்க முகக்கவசம் அணிதல் மற்றும் தடுப்பூசிகளை போட்டுக்கொள்ளுதல் ஆகியவைதான் சிறந்த வழி என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
இதனையடுத்து,கடந்த ஜனவரி 16 ஆம் தேதி முதல் தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கப்பட்டு முதல்கட்டமாக முன்களப் பணியாளர்கள் மற்றும் 45 முதல் 65 வயதுக்குட்பட்டவர்களுக்கு போடப்பட்டன.
இதனத்தொடந்து,மே 1 ஆம் தேதி முதல் 18 முதல் 44 வயதிற்குட்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கப்பட்டு தற்போது வரை நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
இந்த நிலையில்,மக்கள் தங்களுக்கு அருகிலுள்ள தடுப்பூசி மையத்தைக் கண்டறிவதற்காக,மத்திய அரசானது “மை கவர்மென்ட் கொரோனா ஹெல்ப் டெஸ்க்” என்ற வாட்ஸ்அப் தகவல் உதவி மையத்தை தொடங்கியுள்ளது.
அதன்படி இந்த உதவியைப் பெற மக்கள்,+919013151515 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப்பில் ‘Namaste’ என்று அனுப்ப வேண்டும். அதன்பின்னர்,கோவிட் வேக்சினேசன் சென்டர் உள்ளதை அறிய 1 என டைப் செய்து அனுப்ப வேண்டும்.பிறகு தங்களது மாவட்டத்தின் ஆறு இலக்க PIN code நம்பரை அனுப்ப வேண்டும்.இதனையடுத்து,மக்கள் தங்களுக்கு அருகில் உள்ள தடுப்பூசி மையங்களின் பட்டியலை தெரிந்துக்கொள்ள முடியும்.
பெங்களூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணியும், டெல்லி அணியும் பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் மோதுகிறது. இந்த…
சென்னை : அஜித் நடிப்பில் வெளியாகியுள்ள குட் பேட் அக்லி திரைப்படம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது. அஜித்…
பெங்களூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி அணியும், பெங்களூர் அணியும் மோதுகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி…
பெங்களூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் புள்ளி விவரப்பட்டியலில் 2-வது இடத்தில் இருக்கும் டெல்லி அணியும், 3-வது இடத்தில்…
சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் காயம் காரணமாக மீதமுள்ள போட்டிகளில் ஆட முடியாத நிலையில்,…
சென்னை : தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் இன்னும் ஓராண்டில் நடைபெற உள்ள நிலையில், தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் பதவியில்…