மியான்மர் வன்முறை…! இது மிருகத்தனமான ஆட்சி…! – முன்னாள் அதிபர் பராக் ஒபாமா…!
ராணுவத்தின் சட்ட விரோத மற்றும் மிருகத்தனமான முயற்சி ஒருபோதும் மக்களால் ஏற்றுக் கொள்ளப்படாது என அமெரிக்க அதிபர் ஒபாமா தெரிவித்துள்ளார்.
மியான்மரில் கடந்த பிப்ரவரி மாதம், நாடாளுமன்றத் தேர்தலில் ஆங் சாங் சூகியின் கட்சி மீண்டும் பெரும்பான்மை இடங்களை கைப்பற்றி நிலையில், இந்த ஆட்சி கவிழ்க்கப்பட்டது. மேலும் ஆங்சாங் சுகி உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்கள் ராணுவத்தினரால் சிறை வைக்கப்பட்ட நிலையில், ராணுவ ஆட்சிக்கு எதிராக மக்கள் போராட்டங்கள் நாடு முழுவதும் வெடித்தது. இந்தப் போராட்டத்தை இராணுவத்தினர் இரும்புக் கரம் கொண்டு அடக்கினர். இதனால் நூற்றுக்கணக்கானவர்கள் உயிரிழந்துள்ள நிலையில் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக, பல்வேறு தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், இதுகுறித்து அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா அவர்கள், ‘ராணுவத்தின் சட்ட விரோத மற்றும் மிருகத்தனமான முயற்சி ஒருபோதும் மக்களால் ஏற்றுக் கொள்ளப்படாது. மேலும் இது உலக மக்களாலும் ஏற்றுக்கொள்ளப்படாது என்று தெரிவித்தார். இது, மக்களால் நிராகரிக்கப்பட்ட ஒரு கொலைகார ஆட்சி. அதிக உறுதியற்ற தன்மை, மனிதாபிமான நெருக்கடி மற்றும் தோல்வியுற்ற அரசின் அபாயத்தை மட்டுமே கொண்டுவரும் என தெரிவித்துள்ளார்.